உலக அளவில் பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களை விட டோலிவுட் படங்களுக்கும் எப்போதுமே அதிக அளவில் வரவேற்பு உண்டு. என்.டி.ஆர் தொடங்கி இன்று மகேஷ் பாபு, பிரபாஸ், ராம் சரண், அல்லு அர்ஜுன் ராணா டகுபதி வரை பல சூப்பர் ஹிட் ஹீரோக்கள் தெலுங்கு திரையுலகில் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பல படங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நாயகனாக களமிறங்கி உள்ளார் சாய் தரம் தேஜ்.
சாய் தரம் தேஜ், பிரபல நடிகர் சிரஞ்சீவியின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது. "Pilla Nuvvu Leni Jeevitham" என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2014-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார் தேஜ். கடந்த 7 ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தேஜ் நடிப்பில் Republic என்ற படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

Loved the poster!
Wishing my dear brother @IamSaiDharamTej , director @devakatta & the entire team ... All the best!!#Republic#RepublicFirstLook#RepublicOnJune4th pic.twitter.com/wRsaCoPT3s
— Ram Charan (@AlwaysRamCharan) March 25, 2021

தேவ கட்டா இயக்கத்தில் பொலிடிக்கல் திரில்லர் கதைக்களத்தில் வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் First Look போஸ்டர் வெளியாகிய நிலையில் தனது சகோதரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரபல நடிகர் ராம் சரண்.