சுந்தர் சி ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தில் இருந்து விலகியபிறகு மற்ற இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார் ரஜினி. இயக்குநர் முடிவாவதற்கு முன்பே இப்படத்திற்கு சாய் அப்யங்கரை இசையமைப்பாளராக படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Continues below advertisement

தலைவர் 173 படத்தை இயக்கபோவது யார் ?

கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான முதல் ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளார்கள். சுந்தர் சி இப்படத்தை இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானபோது நிச்சயம் புதுவிதமான ஒரு கமர்சியல் படத்தை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் நம்பினார்கள். சுந்தர் சி படத்தில் இருந்து விலகிய நிலையில் தற்போது மற்ற இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார்கள் ரஜினி கமல் . தனுஷ் , மடோன் அஸ்வின் , சித்தா அருண்குமார் ஆகிய இயக்குநர்களின் கதையை படக்குழு பரிசீலனை செய்ததாக கூறப்படுகிறது 

இறுதியாக பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினி படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இந்த ஆண்டு இந்த படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. அடுத்தபடியாக டான் பிக்ச்சர்ஸ் இயக்கத்தில் சிம்பு , சந்தானம் நடிக்கும் படத்தை இயக்கவிருந்தார். இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் தாமதமான காரணத்தினால் தற்போது ரஜினி படத்தை அவர் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

Continues below advertisement

சாய் அப்யரங்கர் இசை 

பல விமர்சனங்கள் இருந்தாலும் டியூட் படத்தின் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் பெரியளவில் ரீச் ஆகின. அடுத்தபடியாக சூர்யாவின் கருப்பு , அட்லீ அல்லு அர்ஜூன் படம் , கார்த்தி நடிக்கும் மார்ஷல் , ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த பெரிய பட்ஜெட் படங்களின் வரிசையில் தற்போது தலைவர் 173 படமும் இணைந்துள்ளது. பேட்ட , தர்பார் , ஜெயிலர் , கூலி , வேட்டையன் , ஜெயிலர் 2 என அடுத்தடுத்து ரஜினி படங்களுக்கு அனிருத் மட்டுமே இசையமைத்து வந்தார்.  தலைவர் 173 படத்திற்கும்  அனிருத் தான் இசையமைப்பார் என்று பலர் எதிர்பார்த்த  நிலையில் தற்போது சாய் அப்யங்கர் அந்த வாய்ப்பை தட்டி தூக்கியுள்ளார். படத்தின் இயக்குனர் அறிவிப்பு வெளியானப்பின் இசையமைப்பாளர் குறித்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்