எஸ்.ஜே சூர்யா
நடிகர் எஸ்.ஜே சூர்யா இன்று தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகராக வேண்டும் என்று ஆசையில் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். அஜித்துடன் வாலி , விஜயுடன் குஷி என அடுத்தடுத்த பெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்து பின் தன் படங்களை தானே தயாரித்து அதில் நடித்தார். இடைப்பட்ட காலத்தில் பெரியளவில் படங்களில் நடிக்காமல் இருந்த எஸ்.ஜே சூர்யாவுக்கு கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இறைவி , சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தன. தொடர்ந்து மான்ஸ்டர் , டான் , மெர்சல் , வதந்தி , மார்க் ஆண்டனி , ஜிகர்தண்டா என இவர் நடித்த படங்களின் கதாபாத்திரங்கள் பேசப் பட்டன. தற்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் ஹீரோ வில்லன் என நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்தியன் 2 , தனுஷ் நடித்துள்ள ராயன் , ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் , விக்ரம் நடிக்கு வீர தீர சூரன் , பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.சி உள்ளிட்ட படங்கள் தற்போது எஸ்.ஜே சூர்யா நடித்து வருகிறார். தெலுங்கில் தற்போது அவர் நடித்து வரும் படம் சரிபோதா சனிவாரம்.
போலீஸ் லுக்கில் எஸ்.ஜே சூர்யா
எஸ்.ஜே சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் இரு படங்களின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இரு படங்களிலுல் எஸ்.ஜே சூர்யா போலீஸ் லுக்கில் தோன்றியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது . தெலுங்கில் நானியின் 31 ஆவது படமாக உருவாகி வரும் சரிபோதா சனிவாரம் படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் லுக் இன்று காலை வெளியாகியது. இந்த படத்தில் முரட்டு மீசையும் எஸ்.ஜே சூர்யா இருந்தார். தற்போது தமிழில் விக்ரம் நடித்து வரும் வீர தீர சூரன் படத்தில் இருந்து எஸ்.ஜே.சூர்யாவின் லுக் வெளியாகியுள்ளது . இதிலும் அவர் போலீஸ் லுக்கில் தோன்றியுள்ளார். ஆனால் மீசை இல்லாமல் சற்று வித்தியாசமான வில்லனாக. இந்த இரு தோற்றங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.