ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர், இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 திரைப்படத்தின் இருதிக்கட்ட படபிடிப்பி நடைபெற்ற வருகிறது. தற்போது படக்குழு சார்பாக வெகு நாட்களாக மறைத்து வைத்திருக்கப்பட்டத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியன் 2 படத்தில் வில்லனாக யார் நடிக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு வெகு நாட்களாக நிலவி வந்த நிலையில் தற்போது அண்மைக் காலங்களில் அனைவருக்கும் பிடித்தமான வில்லனாக உருவாகியிருக்கும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர், நடிகர் , ஏன் இசையமைப்பாளராகக் (இசை) கூட அறியப்படுபவர் எஸ், ஜே. சூர்யா. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனது தனித்துவமான ஸ்டைலுடன் சேர்த்து அந்த கதாபாத்திரத்தையும் தனித்துவமானதாக மாற்றக்கூடியவர் எஸ்.ஜே. சூர்யா. பல திரைப்படங்களில் முக்கிய வில்லனாகவும் நடித்து கலக்கி வருகிறார். ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான் ஆகியப் படங்களில் வில்லனாக நடித்தார் எஸ் ஜே. சூர்யா. அதே சமயத்தில் கதாநாயகனாகவும் அவர் நடிக்கும் படங்கள் நல்ல வெற்றிப்படங்களாக அமைகின்றன. அண்மையில் நேர்காணல் ஒன்றில் தான் தற்போது நடித்து வரும் படங்களை வரிசையாக சொல்லிக் கொண்டு வந்த எஸ்.ஜே. சூர்யா ஒரு படத்தின் பெயரை மட்டும் தெரிவிக்க மறுத்துவிட்டார். சில காலங்களாகவே தான் ஒரு பெரிய திரைப்படத்தின் நடித்து வருவதாக ரகசியம் காத்து வந்தார். தற்போது அந்த ரகசியம் தெரியவந்துள்ளது.
எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் பொம்மை. மொழி , அபியும் நானும் ஆகியத் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராதா மோகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அண்மையில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டிருக்கிறது இந்தப் படம். பொம்மை ஒன்றை நிஜம் என்று நினைத்து அதனை காதலித்து வரும் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
ஷங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. கமல்ஹாசன், சித்தார்த், ரகூல் ப்ரீத் சிங், டெல்லி கனேஷ் , சமுத்திரகனி, குரு சோமசுந்தரம், விவேக், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா ஆகிய நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்தியன் படத்தைத் தொடர்ந்து ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்க இருக்கிறார் ஷங்கர் இந்தப் படத்திலும் எஸ். ஜே. சூர்யாவே வில்லனாக நடிக்க இருக்கிறார்.