தமிழ் சினிமா கொண்டாடும் உச்சபட்ச நடிகரான தளபதி விஜய்க்கு வயது வரம்பின்றி சின்னஞ்சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர். ஒரு ஹீரோ அந்தஸ்து என்பதை காட்டிலும் நம்ம வீட்டு பையன் எனும் அளவுக்கு நெருக்கமான ஒரு ஃபீல் கொடுக்க கூடியவர் விஜய். 


எஸ்.ஏ. சந்திரசேகர் குடும்பம் குறித்த அனைத்து விஷயங்களும் அனைவருக்கும் பரிச்சயமானது. எஸ்.ஏ.சி - ஷோபா தம்பதியின் மகள் வித்யா  சிறு வயதிலேயே உடல்நலக்குறைவால் இறந்தது அந்த ஒட்டுமொத்த குடும்பத்தையே புரட்டி போட்டது. குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் லுக்கிமியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 



நடிகர் விஜய்க்கு தனது தங்கை வித்யாதான் உலகம். அவர் மீது அளவு கடந்த அன்பு, பாசம் வைத்திருந்தார். தனது தங்கையை பறிகொடுத்த சோகம் விஜய்யை அமைதியானவராக மாற்றியது. எங்கள் குடும்பத்தின் ஒட்டு மொத்த சந்தோஷமும் பறிபோனது என பலமுறை எஸ்.ஏ. சந்திரசேகர் பல பேட்டிகளில் கூறியுள்ளார். 


சமீபத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் அவர்கள் வாழ்க்கையில் மிகவும் மிஸ் செய்யும் ஒருவர் பற்றி சொல்ல வேண்டும் என கேட்கப்பட்டது. தன்னுடைய மகள் வித்யாவை இழந்தது வாழ்க்கையில் மிக பெரிய இழப்பு என கூறி இருந்தனர். 



விஜய்யை 'டேய் அண்ணா' என்றே அன்புடன் அழைப்பாராம் வித்யா. எஸ்.ஏ. சந்திரசேகர் மகள் குறித்து கூறுகையில் "பேசிக்கிட்டே இருக்கும் போது போயிட்டு வரேன் என சொல்லி அவளை தூக்கினேன். அப்பவே வாயில் இருந்து ரத்தம் வந்தது. அப்படியே தூக்கி கொண்டு கோயில் குளம் என கூட்டிக்கொண்டு அலைந்தோம். அந்த சமயத்தில் டாக்டர் வந்து பார்த்து முடியவே முடியாது என சொல்லிவிட்டார். அப்படியே என் மடியிலேயே தான் வைத்து இருந்தேன். அவ கண்ணை மூடியதும் விஜய் 'வித்யா' என அப்படி ஒரு சத்தம் போட்டான். அது இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு. அப்போது விஜய்க்கு 10 வயசு. இருவருக்கும் 6 வருஷம் வித்தியாசம். வயசு வித்தியாசம் அதிகமாக இருந்ததால் அவன் தங்கையை இழந்தது அவனால் தாங்க முடியவில்லை. அவள் இழப்பு எங்கள் குடும்பத்திற்கு மிக பெரிய லாஸ்.


வித்யா இறந்து 38 ஆண்டுகளை கடந்தும் இன்றும் எஸ்.ஏ சந்திரசேகர் குடும்பத்தினருக்கு அது ஒரு மிகப்பெரிய வடுவாகவே உள்ளது.