பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி கையில் எடுத்திருக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ . 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்தில் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது. 




இந்த நிலையில், இந்த படம்  2022 உகாதி அன்று பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. முன்னதாக அக்டோபர் 2021 தசரா  அன்று  ‘ஆர்ஆர்ஆர்’ படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், 2022 கோடை வெளியீடாக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதி இப்போது வெளியிடபடாது என தெரிவித்துள்ளனர். இது குறித்து ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ள படக்குழு , “ பலருக்கு இது தெரிந்திருக்கும் . எங்கள் ஆர்.ஆர்.ஆர் படத்தை நாங்கள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளோம். பல்வேறு இடங்களில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என தெரியாது. இதன் காரணமாக எங்களால் தேதியை உறுதிப்படுத்த முடியாது. படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை வருகிற அக்டோபர் 21 ஆம் தேதிக்குள் முடிக்க முடிவு செய்துள்ளோம் “என குறிப்பிடுள்ளனர். 






உலகம் முழுவதும் ஆர்.ஆர்.ஆர் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதால் , வெகுவான திரையரங்குகள் திறந்த பிறகே படத்தை வெளியிடுவார்கள் என தெரிகிரது. சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் பாடல் ஒன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.  ‘நட்பு’  என்ற அந்த பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் நட்பு பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடினர். முன்னதாக ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மேக்கிங் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர் படக்குழு. மெய்சிலிர்க்கும்  வகையில் இருந்த காட்சிகள் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.