ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா, ஒமிக்ரான் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
‘பாகுபலி’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் இயக்குநர் ராஜமௌலி. தெலுங்கில் மட்டும் தெரிந்த முகமாய் இருந்த ராஜமௌலி, பாகுபலிக்கு பிறகு அவர் அடுத்த என்ன படம் இயக்குவிருக்கிறார் என்ற ஆவலுடன் இருந்த நிலையில், ‘ஆர்.ஆர்.ஆர்.,’ என்ற பிரமாண்ட திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. அந்தப் படத்தில் பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்தனர். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்டில், உக்ரைனில் படத்தின் கடைசி ஷெட்யூல் முடிந்தது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம், கடந்தாண்டு அக்டோபர் 13ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகு, பல காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. டிரைலர் வெளியாகி படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள குஷியில் ரசிகர்கள் இருந்தனர். படத்திற்கான புரோமோஷனில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மும்பை என ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டீஆர் பறந்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், கொரோனா, ஒமிக்ரான் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
‘சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நலன்களையும் மனதில் வைத்து, எங்கள் படத்தை தள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நிபந்தனையற்ற அன்பிற்காக அனைத்து ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி’ என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்