சாக்லேட் பாய் மாதவனா, இப்படி என ஆச்சர்யத்துடன் விரிய ஆரம்பிக்கும் கண்கள் படத்தின் கடைசி வரை அப்படியே இருக்கும் என்ற உத்தரவாதத்தைக் கொடுத்திருக்கிறது இந்தப்படம். வாழ்க்கை வரலாறுகளைப் படமாக்குவது பெரும் தலைவலி. ஆனால், அனைத்தையும் சிறப்பாக பேலன்ஸ் செய்து, பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை அப்படியே செதுக்கி இருக்கிறார் நடிகரிலிருந்து இயக்குநராக பிரமோஷன் வாங்கி இருக்கும் மாதவன்.இந்தியாவின் விண்வெளி விஞ்ஞானிகளில் அசகாய சூப்பர்ஸ்டார்களில் ஒருவர் நம்பி நாராயணன். ஆனால், திடீரென குற்றச்சாட்டின் ஒன்றின் காரணமாக கைது செய்யப்பட்டு, கிட்டத்தட்ட அவரது வாழ்க்கையே அழிந்துவிடுகிறது. இளமையில் தொலைக்க வைக்கப்பட்ட கெளரவம், புகழ், அந்தஸ்து என அனைத்தும் பல ஆண்டு சட்டப்போராட்டத்திற்குப் பிறகு, வயதான பிறகு அவருக்கு கிடைத்தது. விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்வில் நடந்த இந்த வரலாற்றை தான் தற்போது திரைப்படம் ஆக்கியிருக்கிறார் மாதவன்.நம்பி நாராயணனை அப்படியே நடிப்பின் மூலம் திரைக்குக் கொண்டு வருவதில் மாதவனுக்கு 90 சதவீதம் மார்க் கொடுக்கலாம். இளம் வயது, நடுத்தர வயது, மூத்த வயது என அனைத்திலும் கன கச்சிதம். அதுமட்டுமல்ல, உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதில், அசத்தல் நடிப்பு.
‛ராக்கெட்ரி – நம்பி விளைவு’ மாதவன் படம் எப்படி இருக்கு? ABP நாடு தரும் 1 நிமிட விமர்சனம் !
கே.ஷண்முகசுந்தரம் | 02 Jul 2022 11:38 AM (IST)
முதல் படத்திலேயே, சென்சிடிவ்வான ஒரு கதையை எடுத்து, யாரும் பெரிய குறை சொல்ல முடியாத அளவுக்கு எடுத்த இயக்குநர் மாதவன், உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்.
ராக்கெட்ரி நம்பி விளைவு விமர்சனம்
Published at: 01 Jul 2022 02:51 PM (IST)