திரைப்படங்களில் வரும் சில கதாபாத்திரங்கள் என்றுமே சாகாவரம் பெற்றவையாக இருக்கும். அப்படி ஒரு சாகாவரம் பெற்ற கதாபாத்திரம்தான் ஜேம்ஸ்பாண்ட். 

Continues below advertisement

புதிய ஜேம்ஸ் பாண்ட் யார்?

ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு என்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு உள்ள நிலையில், ஜேம்ஸ் பாண்ட் படத்தி்ல் புதிய ஜேம்ஸ் பாண்டாக நடிக்கப்போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்த நிலையில், புதிய ஜேம்ஸ் பாண்டாக பிரபல நடிகர் ராபர்ட் பாட்டின்சன் நடிப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர்மேன் படத்தின் நாயகன் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

கடும் போட்டி:

ஜேம்ஸ் பாண்ட் படத்தின் நாயகனுக்கான போட்டியில் நிகோலஸ் ஹோல்ட், ஜேக் லாவ்டன், ஜோஷ் ஓ கான்னர் மற்றும் கால்லம் டர்னர் ஆகியோர் பாட்டின்சனுடன் போட்டியில் இருந்தனர். இவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் லண்டனில் ஆடிஷன் நடைபெற்றது. சண்டைக் காட்சிகள், உடல்மொழி, வசன உச்சரிப்பு உள்ளிட்ட பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு ராபர்ட் பாட்டின்சன் கதாநாயகனாக தேர்வாகியுள்ளார்.

இந்த ஆடிஷனை கேஸ்டிங் இயக்குனர் நினா கோல்ட் மேற்பார்வை செய்துள்ளார்.  26வது ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்குனர் டேனிஸ் வில்லெனியூவ் இயக்க உள்ளார். ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நாயகனாக நடிக்க இருப்பது குறித்து பேசிய ராபர்ட் பாட்டின்சன் தனது கனவு கதாபாத்திரம் நனவாகியுள்ளதாக பேசியுள்ளார்.

7வது ஹீரோ:

இயான் ஃப்ளெமிங் என்ற நாவலாசிரியர் உருவாக்கிய ஜேம்ஸ் பாண்ட் என்ற உளவாளியை கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு 1962ம் ஆண்டு முதன்முறையாக ஜேம்ஸ் பாண்ட் படம் உருவானது. சீன் கானரி நாயகனாக நடித்த அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெறவும் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பாகங்கள் உருவாகத் தொடங்கியது.

சீன் கானரிக்கு பிறகு ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் ப்ராஸ்னன், டேனியல் கிரெக் ஆகியோர் ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளனர்.  இவர்களில் சீன் கானரி, ரோஜர் மூர், பியர்ஸ் ப்ராஸ்னன் மற்றும் டேனியல் கிரெக் இவர்களது ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகும். தற்போது ராபர்ட் பாட்டின்சன் இந்த வரிசையில் 7வது ஜேம்ஸ் பாண்டாக இணைந்துள்ளார்.

பீகி ப்ளைண்டர்ஸ் படத்திற்கு திரைக்கதை எழுதிய ஸ்டீவன் நைட் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார். இந்த படம் அடுத்தாண்டு தொடங்கப்பட்டு, 2028ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 40 வயதான ராபர்ட் பாட்டின்சன் தி பேட்மேன், தி டெனட் படங்களில் நடித்தவர்.