கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் இயக்கிய படம் சின்ன கவுண்டர். 1991ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சுகன்யா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் இன்றுவரை அனைவராலும் கொண்டாடப்பட்டுவருகிறது.

Continues below advertisement

இந்நிலையில்,  சின்னக்கவுண்டர் படத்தின் இரண்டாம் பாகம்  உருவாக இருக்கிறது. இதனை ஆர்.வி. உதயகுமாரே இயக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. ஆர்.வி. உதயகுமார் கமல் ஹாசனை வைத்து சிங்காரவேலன், ரஜினியை வைத்து எஜமான், கார்த்தியை வைத்து பொன்னுமனி போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் என்ற பெயர் பெற்றவர்.

தற்போது அவர் மீண்டும் இயக்குநராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில்  நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

ஆர்.கே. சுரேஷ் பாலாவின் இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடிப்பில் உருவான தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக அறிமுகமானார். வில்லனாக அவர் நடித்த நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதனையடுத்து அவர் பல படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது இயக்குநர் பாலா தயாரிப்பில் விசித்திரன் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். மலையாள படத்தின் ரீமேக்கான இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

விசித்திரன் தவிர்த்து ஆர்.கே. சுரேஷ் காடுவெட்டி என்ற படத்திலும் நடித்திருக்கிறார். ஆர்.கே. சுரேஷ் நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளரும்கூட. அவர் ஸ்டூடியோ 9 என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்திவருகிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண