ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் அண்ணா சீரியலில் நடித்து வரும் பிரபல சின்னத்திரை நடிகரான செந்திலிடம் சைபர் கிரைமில் பணத்தை இழந்துவிட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகர் செந்தில் பிரபல சின்னத்திரை சீரியலான சரவணன் மீனாட்சி மூலம் ரசிகர்களின் மனத்தில் நீங்காத இடத்தை பிடித்தார். ரேடியோ ஆர்ஜே-வான இவரின் நீங்க நான் ராஜா என்கிற நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இவர் நடித்த சீரியல்களும் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், அண்ணா சீரியலில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் செந்தில் தான் பணம் இழந்துவிட்டதாக அதிர்ச்சி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: திரைப்பட தொழிலாளர்கள் வீடு கட்ட விஜய் சேதுபதி நன்கொடை...ஒருத்தரே இத்தனை கோடி கொடுத்திருக்கார்
”ஒரே மெசேஜ் தான் மொத்த பணமும் போச்சு”:
இந்த நிலையில் தான் எப்படி ஏமாற்றப்பட்டேன் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் "எனக்கு தெரிந்த தொழிலதிபர் நண்பர் ஒருவர் வாட்சப் நம்பரில் இருந்து மெசேஜ் வந்தது. அவர் எனக்கு பெரும்பாலும் மெசெஜ் செய்யாமாட்டர். நான் உடனடியாக அவருக்கு பதலளித்த போது, ஒரு நம்பரை அனுப்பி அதில் அனுப்ப சொன்னார். அவருக்கு 15 ஆயிரம் பணம் கேட்டிருந்தார். நான் ட்ரைவிங்கில் இருந்த நிலையில் அவர் சொன்ன நம்பருக்கு பணத்தையும் அனுப்பிவிட்டேன்."
"ஆனால் அதன் பிறகு பெயரை பார்த்தால் வேறு ஒரு நபர் பெயர் அதில் இருந்தது. அதற்குள் எனது பணம் பறிபோய்விட்டது. அது பற்றி போன் செய்து கேட்டபோது தான் அவர் தனது வாட்சப் ஹேக் ஆகிவிட்டது என்று கூறினார்." என்னிடம் மட்டும் இல்லை 500 பேரிடம் இது போல பணத்தை பறித்து ஏமாற்றியுள்ளனர்.
அதனால் அனைவருக்குன் ஒரு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவே இந்த வீடியோவை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
"இது போல 500 பேர் இன்று கால் செய்துவிட்டார்கள் என கூறினார்கள். அப்போது தான் சைபர் க்ரைமில் பணத்தை இழந்துவிட்டேன் என்பது புரிந்தது. உடனே சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்து இருக்கிறேன்" என செந்தில் கூறி இருக்கிறார்.