தமிழக சட்டமன்ற தேர்தலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓட்டுப் போடாத காரணத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

வாக்களிக்காமல் போன லோகேஷ் கனகராஜ்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. இதில் 85.10 சதவிகித வாக்குப்பதிவு நடந்தது. இது தமிழக அரசியல் வரலாற்றில் சாதனையாக அமைந்தது. அதேசமயம் தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, பாமக வேட்பாளர் திலகபாமா ஆகியோர் வாக்களிக்கவில்லை. இப்படியான நிலையில் இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட்டது. அதன் தலைவர் விஜய்யுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்க வராதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவரை இணையவாசிகள், தவெக தொண்டர்கள் கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர். 

காரணத்தை விளக்கிய ஆர்.ஜே.பாலாஜி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள DC படத்தின் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆர்.ஜே.பாலாஜி பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வில் பேசிய அவர், “29 படத்தின் ப்ரோமோஷனுக்கு போய் விட்டு லோகேஷ் கனகராஜ் என்னுடைய கருப்பு படத்திற்கு ப்ரோமோஷன் செய்தார். அந்த ப்ரோமோஷன் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. லோகேஷ் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் லோகேஷ் கனகராஜாக எல்லாருக்கும் தெரியும் முன்பிருந்தே நல்ல பழக்கம். எப்போது எனக்கு தேவை என்றாலும் உடனே வந்தார். நான் நடித்த படத்தில் நடித்தார், ப்ரோமோஷனுக்கு கூப்பிட்டால் வந்தார். 

Continues below advertisement

கமெண்ட்ரிக்கு கூட வந்தார். மொத்த தமிழ்நாட்டு மக்கள் சார்பாக உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அருண் மாதேஸ்வரன் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. அதனால் தயவு செய்து ஷேவ் செய்து முடி வெட்டி விடுங்கள். லோகேஷ் நல்ல களையாக இருப்பான். கடந்த 2 வருஷமாக அவன் முகத்தை நான் தேட வேண்டியிருக்கிறது” என தெரிவித்தார். 

அதேபோல் இன்னொரு தகவலை நான் சொல்ல வேண்டியுள்ளது. தேர்தல் நாளில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்க வரவில்லை என அவரை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்தார்கள். அதுக்கு பின்னால் ஒரு சம்பவம் உள்ளது. நான் ஓட்டு போட்டு விட்டு மும்பைக்கு ஐபிஎல் கமெண்ட்ரிக்காக செல்ல சென்னை விமான நிலையம் சென்றேன். அவர் சென்னையில் ஒரு வேலையை முடித்து விட்டு கோவைக்கு செல்ல அங்கு வந்தார். 

ஏர்போர்ட்டில் இருவரும் சந்தித்து பேசி விட்டு நான் என்னுடைய விமானத்தில் போய் ஏறினேன். ஆனால் லோகேஷ் கனகராஜ் செல்ல வேண்டிய விமானத்தை அவர் தவற விட்டார். ஓட்டு போட போன அவரால் அதை செலுத்த முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.