தாயை கொன்ற பிரபல கனேடியன் நடிகர் ரியான் கிரந்தமிற்கு , நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
"ரிவர்டேல்", "டைரி ஆஃப் எ விம்பி கிட்" மற்றும் "சூப்பர்நேச்சுரல்" உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரியான் கிரந்தம். கனடாவை சேர்ந்த இவருக்கு வயது 24. தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் , பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஸ்குவாமிஷில் உள்ள அவர்களின் வீட்டில் ரியான் கிரந்தமின் தாய் பார்பரா வெய்ட் (Barbara Waite) பியானோ வாசித்து கொண்டிருந்த நேரத்தில் , பின்னால் இருந்து சற்றும் எதிர்பாராத வகையில் அவரின் தலையை குறி வைத்து ரியான் கிரந்தம் துப்பாக்கியால் சுட சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.கொலை நடந்த சிறிது நேரத்திலேயே கிரந்தம் ஒரு GoPro வீடியோவை எடுத்தார், அதில் அவர் தனது தாயைக் கொன்றதை ஒப்புக்கொண்டு அவரது உடலைக் காட்டினார்.
தாயை கொன்ற பிறகு அவரது உடலை ஷூட்டால் சுற்றி , அதனை சுற்றி மெழுகு வர்த்திகளை ஏற்றி வைத்திருக்கிறார் ரியான். தாயை கொன்ற காரணம் குறித்து ரியான் கூறிய பொழுது “ தாம் எடுத்துக்கொண்ட கமிட்மெண்ட்டிற்காக, தான் வன்முறையை தேர்வு செய்துவிட்டேன். அதனை அறிந்தால் என் தாய் மிகவும் வேதனைப்படுவார், பல சித்திரவதைகளுக்கு ஆளாவார்.அதனை தவிர்ப்பதற்காகத்தான் அவரை கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். ரியான் கிரந்தம் குறித்து பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் பல நாட்களாக தீவிர மன அழுத்தம், தற்கொலை எண்ணம் , மனச்சோர்வு உள்ளிட்ட பல்வேறு மூளை தொடர்பான பிரச்சனைகளில் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.