பிரபல கன்னட நடிகர் யஷ் நடித்து விரைவில் வெளியாகவுள்ள டாக்ஸிக் படத்தில் பெண்களை கேவலமாக காட்டியதாக கன்னட நடிகை ரிஷிகா சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். 

Continues below advertisement

சர்ச்சைகளை சந்திக்கும் டாக்ஸிக் படம்

கே.ஜி.எஃப் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகர் யஷ். இவர் தற்போது டாக்ஸிக் (Toxic: A Fairy Tale for Grown-Ups) என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகையும், பிரபல மலையாள இயக்குநருமான கீது மோகன் தாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். டாக்ஸிக் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் என 5 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மிக அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த படத்தின் போஸ்டர் தொடங்கி பாடல் வரை கடும் சர்ச்சையாக மாறியது. ஹீரோயின்களை பாலியல் காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தியதாக ரசிகர்களே கடுமையாக விமர்சனம் செய்தனர். நடிகை நயன்தாராவுக்கு அப்படியான காட்சிகள் வைக்காமல் அவர் புகைபிடிக்கும்படியான காட்சி இடம் பெற்றது சர்ச்சைகளை கிளப்பியது. சமீபத்தில் டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. 

Continues below advertisement

நடிகை ரிஷிகா சிங் மிரட்டல்

இந்த நிலையில் பிரபல கன்னட நடிகை ரிஷிகா சிங் டாக்ஸிக் பட ட்ரெய்லரை கடுமையாக விமர்சித்துள்ளார்.  அதில், “பெண்கள் சித்தரிக்கப்பட்ட விதம் மற்றும் நடிகை இடம்பெறும் அந்தரங்கக் காட்சிகள் குறித்து அவர் கேள்வி மேல் கேள்வியெழுப்பியுள்ளார். டிரெய்லரில் இடம்பெற்ற காட்சிகள் தனக்கு ஏமாற்றமளிக்கிறது. பெண்களை மரியாதையுடன் சித்தரிக்கவில்லை. நடிகர் யஷ் ஒரு கணவர் மற்றும் தந்தை என்பதை மறந்து விட வேண்டாம்.

கன்னட சினிமா வளர்ந்து சர்வதேச பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால் டாக்ஸிக் போன்ற ஒரு பெரிய படம் கன்னடத்தில் தயாரிக்கப்படுவதும், அதில் ஒரு பாலிவுட் நடிகைஇடம்பெறுவதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் ட்ரெய்லரில் ஆண் அகங்காரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்துவிட்டு பெண்கள் சித்தரிக்கப்பட்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை. 

5 ஹீரோயின்கள் இருந்தும் ஒருவராவது அழகாகவோ அல்லது பாராட்டத்தக்க வகையிலோ காட்டப்பட்டிருக்கிறாரா? என ரிஷிகா சிங் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இயக்குநர் கீது மோகன்தாஸூக்கு தனிப்பட்ட பார்வை இருந்தாலும் அதில் நம் கலாச்சாரத்தையும் கொண்டு சேர்க்காமல் இருக்கலாம். ஆண்களுக்கு கண்ணியமும், பெண்களுக்கு மரியாதையும் அளிக்கப்பட வேண்டும். கர்நாடகாவைச் சேர்ந்த யஷ் இதற்கு எப்படி ஒப்புக்கொண்டார். பெண்களுக்கு மரியாதை அளிக்காவிட்டால் மக்கள் கர்நாடகாவை விட்டு வெளியேற நேரிடும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். ரிஷிகா சிங்கின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.