ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கன்னடத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது காந்தாரா சாப்டர் 1. காந்தாரா படத்தின் முன்கதையாக இப்படம் உருவாகியுள்ளது. ருக்மினி வசந்த் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இன்று அக்டோபர் 2 ஆம் தேதி பான் இந்திய அளவில் வெளியாகியுள்ள காந்தாரா படத்தின் சமூக வலைதள விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்
காந்தாரா சாப்டர் 1 விமர்சனம்
மன்னராட்சி காலத்தில் அரசர்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களை மையமாக வைத்து நகர்கிறது படத்தின் கதை. ஐரோப்பியர்களும் , அரேபியர்களும் இந்தியாவில் வனிகத்திற்காக வருவது இதில் ஏற்படும் பிரச்சனைகள் . இவற்றுக்கிடையில் நாட்டார் தெய்வங்கள் எப்படி உள்ளே வருகின்றன என்பதே காந்தாரா சாப்டர் 1 படத்தின் கதை. படத்தின் சொல்லப்படும் கதைக்கு படக்குழு பெரியளவில் ஆராய்ச்சி செய்துள்ளதை நம்மால் உணரமுடிகிறது. இந்த அனைத்து அம்சங்களையும் வைத்து இயக்குநர் ரிஷப் ஷெட்டி மிக சுவாரஸ்யமாகவும் பிரம்மாண்டமாகவும் படத்தை வழங்கியிருக்கிறார். குறிப்பாக புலியுடன் சண்டைப் போடும் காட்சி மற்றும் இடைவேளைக் காட்சி சிறப்பாக வந்துள்ளன. ஒவ்வொரு சண்டைக் காட்சிகளும் சிறப்பாக அரங்கேற்றப்பட்டுள்ளன." என விமர்சகர் ஒருவர் படத்தைப் பற்றி கூறியுள்ளார்
முழுக்க முழுக்க புராண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள காந்தாரா திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளன. முக்கியமாக படத்தின் இரண்டு ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. இந்த இரண்டு காட்சிகளும் வி.எஃப்.எக்ஸ் தரத்தில் வியக்கவைக்கின்றன. முதல் பாதி பெரும்பாலும் நகைச்சுவையாக செல்கிறது . நாயகி ருக்மினி வசந்த் கதாபாத்திரத்திற்கு பெரியளவில் முக்கியத்துவம் இல்லை. ஒரு சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும் பார்வையாளர்களின் கவனத்தை சிதறவிடாமல் படத்தில் காட்சிகளை எழுதியிருக்கிறார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. படத்தின் இறுதி 30 மணி நேரம் மெய் சிலிர்க்க வைக்கும் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.