ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் அதிபிரம்மாண்டமாக உருவாகியுள்ள காந்தார் 2 வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெரும் தொலை கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் கைபற்றியுள்ளது. கே.ஜி.எஃப் படத்திற்கு பின் அதிக விலைக்கு விற்கப்பட்ட கன்னட படம் காந்தாரா 2 என்பது குறிப்பிடத் தக்கது
அக்டோபர் 2 வெளியாகும் காந்தாரா 2
கன்னடத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்பட கன்னட திரையுலகத்தையே புரட்டி போட்டது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இப்படம் புராண கதையை அடிப்படையாக வைத்து உருவானது. ரூ 16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வரவேற்பைப் பெற்று பான் இந்திய வெற்றிபெற்றது. உலகளவில் இப்படம் ரூ 400 கோடி வசூலித்தது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தைக் காட்டிலும் அதிபிரம்மாண்டமாக ரூ 125 கோடி பட்ஜெட்டில் காந்தாரா 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதிலும் இருந்து 20 வி.எஃப்.எக்ஸ் நிறுவனங்கள் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள். வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காந்தாரா 2 ஓடிடி விற்பனை
காந்தாரா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைபற்றியுள்ளது. ரூ 125 கோடிக்கு படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமை விற்பனையாகியுள்ளதாக பிங்க்வில்லா தகவல் வெளியிட்டுள்ளது. கன்னடத்தில் சினிமா வரலாற்றில் கே.ஜி.எஃப் படத்திற்கு அடுத்தபடியாக காந்தாரா 2 படம் அதிக விலைக்கு ஓடிடியில் விற்பனையாகியுள்ளது. மேலும் தமிழில் கமலின் தக் லைஃப் , ரஜினியின் கூலி மற்றும் விஜயின் ஜனநாயகன் படங்களை விட காந்தாரா 2 அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது.