பிரபல இசை விருதுகளில் ஒன்றான கிராமி விருதை மூன்றாவது முறையாக கர்நாடகாவைச் சேர்ந்த ரிக்கி கெஜ் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கிரிப்டோ.காம் அரங்கில் கிராமி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் சிறந்த அதிவேக ஆடியோ ஆல்பம் (Best Immersive Audio Album) பிரிவில் ரிக்கி கெஜின்  டிவைன் டைட்ஸ் ஆல்பம் விருது பெற்றுள்ளது. இதன் மூலம் 3வது முறையாக அவர் கிராமி விருதை பெற்றுள்ளார். முன்னதாக இந்த விருதுக்கான பட்டியலில் கிறிஸ்டினா அகுலேரா ('அகுலேரா'), தி செயின் ஸ்மோக்கர்ஸ் ('மெமரீஸ்... டோன்ட் ஓபன்), ஜேன் இராப்ளூம் ('இன்விசிபிள்-ஃபோகஸ் 1) மற்றும் நிடாரோஸ்டோமென்ஸ் ஜென்டெகோர் & ட்ரொன்டிஹெய்ம்சோலிஸ்டீன் (துவாஹியூன் - பீடிட்யூட்ஸ் காயமுற்ற உலகிற்கு) ஆகியவை பரிந்துரைக்கப்பட்டிருந்தது.






முன்னதாக 2015 ஆம் ஆண்டு விண்டஸ் ஆஃப் சம்சாரா என்ற பாடலுக்காகவும், 2022 ஆம் அண்டு சிறந்த புதிய ஆல்பம் பிரிவில் தனது டிவைன் டைட்ஸ் ஆல்பத்திற்காகவும் அவர் இந்த விருதை வென்றுள்ளார்.அமெரிக்காவில் பிறந்த ரிக்கி கெஜ், தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். கிராமி விருதுக்கு கெஜின் ஆல்பம் பரிந்துரைக்கப்பட்டப் போது, இந்த மதிப்புமிக்க விருதுக்கு இந்திய இசை அங்கீகரிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது மற்றும் சமூக தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இசையைத் தொடர வேண்டும் என்ற எனது நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது என அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.