ஏ.ஆர்.ரஹ்மான் தங்கை:


குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி இஷ்ராத் காத்ரி (Ishrath Qadri) பாடியுள்ள தேச பக்தி பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் தொடங்கி அவரது தங்கைகள் வரை அனைவரும் இசை சார்ந்த துறையிலேயே பணி புரிந்து வருகின்றனர்.


ரஹ்மானின் தங்கை ஏ.ஆர் ரைஹானா பிரபல பாடகியாகவும், இசை அமைப்பாளரும் விளங்கும் நிலையில் அவரது மற்றொரு தங்கையான இஷ்ரத் காத்ரியும் தனது அண்ணன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளதுடன், இசையமைத்தும் வருகிறார்.


மகாகவி பாரதி வரிகள்:


அந்த வகையில் வரும் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படும் 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ’எந்தையும் தாயும்’ எனும் பாரதியாரின் தேசபக்தி பாடலைப் பாடி இசையமைத்து வீடியோ பகிர்ந்துள்ளா இஷ்ரத். இந்தப் பாடலை மாதேஷ் இயக்கியுள்ளார். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். 


 






இந்திய நாட்டைப் போற்றும் சிறந்த வரிகளைக் கொண்ட இந்தப் பாடல் இஷ்ராத்தின் இசையில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில்,  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.