சில படங்களை தியேட்டரில் பார்த்ததை விட டிவியில் பார்க்கும்போது வித்தியாசமாகவும், நமக்கு பிடிக்கும்படியும் இருக்கும்.  அப்படியான ஒரு படம்தான் ரவிகிருஷ்ணா, தமன்னா, இலியானா நடித்த கேடி திரைப்படம். இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 17 வருடங்கள் கழிந்துள்ளன.


அது ஒரு கல்லூரி காலம்


2000 காலக்கட்டம் அதிகம் வெளியான ஒரு கதை என்றால். அது கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்தி வெளியான கதை தான். கல்லூரியை மையமாக வைத்து எடுக்கப் படும் கதைதான் மக்களிடம் நன்றாக எடுபடுகிறது தான் அன்றைய நம்பிக்கை. அதனால் சம்பந்தமே இல்லையென்றாலும் ஏதாவது ஒரு சின்ன லாஜிக் வைத்து சமாளித்து ஒரு கல்லூரி வாழ்க்கையை படத்தில் காட்டிவிட வேண்டும் என்பதே பெரும்பாலான படங்களில் நோக்கமாக இருந்து வந்திருக்கிறது. இந்த கதைக்குள் என்ன புதிதாக காட்ட முடியும் என்பதை தான் நமது இயக்குநர்கள் ஏதாவது புதிதாக செய்ய முயற்சி செய்தார்கள். அதில் சில கதைகள் வெற்றிபெற்றன. சில கதைகள் எடுபடவில்லை. அப்படி தியேட்டரில் ஓடாமல் போன ஒரு படம், டிவியில் ரசிக்கப்படும் என்றால் அதில் ஒரு படம் தான் “கேடி”


ஒரு சுமாரான ஹீரோவை விரட்டும் இரண்டு அழகானப் பெண்கள்


வழக்கம் போல் இளம் பருவத்தில் பொறுப்பில்லாமல் ஜாலியாக ஆனால் அதே நேரத்தில் நல்லவனாக காட்டப்படுகிறார் கதாநாயகன் ரகு ( நமது ரவிகிருஷ்னா ) அதே கல்லூரியில் வந்து சேர்கிறார் ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டரின் தங்கச்சியான பிரியங்கா(தமன்னா). தனக்கு வகுப்பறையில் காற்றோட்டம் இல்லையென்றால் ஏ,சி மாட்ட வைப்பார். தனக்கு பிடிக்கவில்லை என்றால் கல்லூரியின் முதல்வரையே மாற்ற வைப்பார்.


ரகுவைக் கண்டாலே பிடிக்காத பிரியங்கா. தனது வீட்டில் வேலை செய்பவரின் மகள் அதே வகுப்பில் தனக்கு சமமாக படிக்கும் ஆர்த்தியைக் கண்டும் எரிச்சலடைகிறார். ரகுவும் ஆர்த்தியும் காதலித்து வருகிறார்கள். போகப் போக ரகுவின் மீது காதல்  வயப்படும் பிரியங்கா எப்படியாவது அவனை அடைய வேண்டும் என்று டாக்ஸிகாக மாறுகிறார். தனது பலத்தை வைத்து ரகுவை திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்கிறார் எல்லாம் முடிந்து  கடைசியில் மிரட்டி வாங்குவது காதல் இல்லை என்கிற அறிவு ஏற்பட்டு திருந்துகிறார்.


பிரியங்கா திருந்த நினைத்தாலும் ரவிகிருஷ்ணாவின் மேல் இருந்த அப்செஷன் காரணத்தினால் பிரியங்காவின் அண்ணன் ஒரு படி மேலே சென்று ரகுவின் காதலியை சித்திரவதை செய்கிறார். இதன்பிறகு என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை. 


இயக்குநர்களின் கற்பனைகள்


தமிழ் சினிமாவை பொறுத்தவரை சில படங்களில் ஹீரோவிற்கு பில்டப் அதிகம் கொடுக்க வேண்டும் நடிகைகளை நெகட்டிவ் கேரக்டரில் கொண்டு வரும் எண்ணங்கள் 2000ம் காலக்கட்டங்களில் தொடங்கியது. படையப்பா படத்தில் நீலாம்பரி, திமிரு படத்தில் ஈஸ்வரி போல கேடி படத்தில் தமன்னா மாடர்ன் வீட்டு நெகட்டிவ் எண்ணம் கொண்ட பெண்ணாக நடித்திருந்தார். வில்லியாக நடிக்கும் பிரபலங்கள் காதலுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதும், அமைதியான குணங்கள் கொண்ட பெண் தான் என்றைக்கும் சிறந்தது என கூறாமல் கூறிய இயக்குநருக்கு அந்த காலக்கட்டத்தில் விமர்சனங்கள் எழுந்தது.   


ரவிகிருஷ்ணாவின் ராசி 


நடிகர் ரவிகிருஷ்ணா 7 ஜி படத்தின்  மூலம் தான் தமிழில் அறிமுகமானார். இந்த படம் அவரது அண்ணன் ஜோதி கிருஷ்ணா தான் இயக்கியிருந்தார். மேலும் இந்த படம் தான் தமன்னா, இலியானாவின் முதல் படமாகும். முதல் படத்தில் தான் ரவிகிருஷ்ணா ஹீரோயினுடன் சேரவில்லை என்றாலும், 2வது படத்தில் 2 ஹீரோயின்கள் இருந்தாலும் கடைசியில் ஒருவரை தன் கையாலே தன்னை சுட வைத்து இன்னொருவரை மனநலம் பாதிக்கப் பட்டவராக மாற்றி நல்லா சந்தோஷமாக முடிய வேண்டிய படத்தை என்னடா இப்படி பண்ணிட்டீங்க என்ற அதிருப்தி கிளைமேக்ஸோடு முடிந்தது கேடி படம்.