நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான சர்ச்சை மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி, அதனைத் தொடர்ந்து ரவி மோகனும் தனது பேட்டியில் கெனிஷாவுடனான உறவு குறித்து பேசியிருந்த நிலையில், தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் கடந்த 2024 ஆம் ஆண்டு விவாகரத்தை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரவி மோகனுக்கு பாடகி கெனிஷாவுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி ஆர்த்தி குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் கெனிஷா தனக்கு மனநல ஆலோசனை வழங்குவதாகவும் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் கூறியிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ரவி மோகன் கெனிஷா இருவரும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக காணப்பட்டார்கள். ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸில் கெனிஷா இணைந்து நிர்வகித்து வந்தார். இருவர் குறித்த விமர்சனங்கள் அதிகரிக்கவே கெனிஷா ரவி மோகன் இருவரும் பிருந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. கெனிஷா தன்னை விட்டு சென்றுவிட்டதாக ரவி மோகன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இருவரும் மீண்டும் கோவாவில் ஒன்றாக இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
கஞ்சா புகைத்த ரவி மோகன்
மேலும் இந்த வீடியோவில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் இணைந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ரவி மோகன் பத்திரிகையாளர்களிடம் பேசியதன் உண்மைத்தன்மை கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆர்த்தி ரவி மோகன் விவாகரத்து விஷயத்தில் ரசிகர்கள் ரவி மோகனுக்கே ஆதரவு தெரிவித்து வந்தனர். தற்போது இந்த வீடியோவால் ரசிகர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்தாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்
