ரவி மோகன்:

தமிழ் சினிமாவிலில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன். ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன், உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது 'கராத்தே பாபு', 'பராசக்தி', இன்னும் பெயரிடாத புதிய படம் போன்றவை இவரின் கைவசம் உள்ளது.

Continues below advertisement

ரவி மோகன் - ஆர்த்தி காதல் திருமணம்:

ரவி மோகன் , பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 15 வருட திருமண பந்தத்தில் இருந்து விவாகரத்து பெற்று விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இந்த தகவல் ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தியது. ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற காரணம், அவர் தன்னை வேலை ஆட்கள் முன்பே அசிங்கப்படுத்தி தன்மானத்தை சீண்டி பார்த்ததாக பேட்டி ஒன்றில் இருந்தார்.

கெனிஷாவுடன் காதல் சர்ச்சை:

மேலும் அம்மாவுடன் சேர்ந்து பல தொந்தரவுகள் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து ரவி மோகன், கெனிஷா என்கிற பாடகியோடு தொடர்பு வைத்துள்ளதால் தான் ஆர்த்தியை பிரிவதாக கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக சில தகவல்கள் வெளியான போதும், அதை ரவி மோகன் மறுத்தார். தற்போது ரவி மோகன் மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் நடந்து வரும் நிலையில்... இன்று காலை முதலே, ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு ஜோடியாக வந்தது தான்... தற்போது கோலிவுட் திரையுலகின் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.

Continues below advertisement

ரவி மோகன் காதலை தெரியப்படும் விதமாகவே அவருடன் ஒன்றாக வந்துள்ளதாகவும், விவாகரத்துக்கு பின்னர் இவர்களின் திருமண அறிவிப்பு வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கூறப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, தற்போது ஆர்த்தி ரவி, சூட்டோடு சூடாக பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆர்த்தி ரவியின் பரபரப்பு அறிக்கை:

இந்த அறிக்கையில் ஆர்த்தி கூறியுள்ளதாவது... " நான் ஒரு வருடமாக, ஒரு கவசம் போல் என்னுடைய மௌனத்தை சுமந்து கொண்டிருக்கிறேன். அதற்க்கு காரணம் நான் பலவீனமாக உள்ளேன் என்பது அல்ல, என் மகன்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதால் தான்.  

என் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு பழியும், மோசமான விமர்சனங்களையும் நான் உள்ளே வாங்கிக்கொண்டு அமைதியாக இருப்பதற்கு காரணம், உண்மையை சொல்ல வேண்டாம் என்பது கிடையாது. பெற்றோர்களுக்கிடையிலான அந்த சுமையை குழந்தைகள் சுமக்க வேண்டாம் என்பதற்காக தான் அமைதி காத்தேன்.

ஆனால், இன்று வெளியான புகைப்படங்களையும், அதற்கான தலைப்புகளையும் பார்த்தபோது, எல்லாம் வேறு மாதிரியாக தோன்றியது. என்னுடைய விவாகரத்து வழக்கு தொடர்ந்து  நடந்து வருகிறது. ஆனால் 18 ஆண்டுகளாக என் அன்பிலும், விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் துணையாக இருந்தவர் என்னை மட்டும் விட்டுச்செல்லவில்லை. ஒரு காலத்தில் எனக்கு கொடுத்த சத்தியத்தில் இருந்தும் பொறுப்புகளிலிருந்தும் விலகிச் சென்றுள்ளார்.

அவர் எனக்கு உண்மையாக இருந்திருந்தால், நான் முன்பே என் தனிப்பட்ட நலன்களைப் பாதுகாத்திருப்பேன். ஆனால் நான் கணக்கீடுகளை விட அன்பைத் தேர்ந்தெடுத்தேன். பரிவர்த்தனையை விட நம்பிக்கையை தேடினேன். இறுதியில் இங்கு வந்து நிற்கிறேன்.  நான் அன்பு செலுத்தியதால் ஒருபோதும் கவலைப்படவில்லை. ஆனால் என் காதல் மீண்டும் பலவீனமாக பார்க்க முடியாது. என் குழந்தைகள் 10 மற்றும் 14 வயதே ஆகும் சிறு பிள்ளைகள். அவர்களுக்கு பாதுகாப்பு தான் தேவை. அதிர்ச்சி அல்ல. சட்டப்பிரிவுகளை புரிந்துகொள்ளும் வயது அவர்களுக்கு இல்லை. ஆனால் கைவிடப்பட்டதை புரிந்துகொள்ளும் வயது. பதிலளிக்கப்படாத அழைப்புகளும், ரத்து செய்யப்பட்ட சந்திப்புகளையும் அவர்கள் அறியும்போது அது அவர்கள் மனதில் காயங்களாக மாறிவிடும். இன்று நான் ஒரு மனைவியாகப் பேசவில்லை. ஒரு அநீதி இழைக்கப்பட்ட பெண்ணாகக் பேசவில்லை. தன் குழந்தைகளின் நலனை மட்டுமே எதிர்பார்க்கும் ஒரு தாயாகப் பேசுகிறேன். நான் இப்போது பேசவில்லை என்றால் அவர்களை என்றென்றும் இழந்துவிடுவேன் என தன்னுடைய குமுறலை கொட்டியுள்ளார்.