அரசியல் களத்தில் குதித்த ரவி மோகன் – வெளியானது 34வது படத்தின் டைட்டில் டீசர்!
தமிழ் திரையுலகின் முன்னனி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன்.

டாடா புகழ் இயக்குநர் கணேஷ் பாபு இயக்கும் ரவி மோகனின் 34வது திரைப்படத்தின் டைட்டில் கார்டு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு கராத்தே பாபு என பெயரிடப்பட்டுள்ளது.
Just In




இதுகுறித்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னனி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ஜெயம் படத்தில் அறிமுகமான ரவி அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டு வந்தார். ஆனால் சமீபத்தில் என்ன ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் எனவும் ரவி மோகன் என்றே அழையுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனிடையே பிரதர், காதலிக்க நேரமில்லை படங்கள் ரவி மோகனின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் தற்போது டாடா படம் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் தனது 34 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தௌஃபி எஸ் ஜிவால், சக்தி வாசுதேவன், கே.எஸ். ரவிக்குமார், நாசர், Vtv கணேஷ், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜா ராணி பாண்டியன், சந்தீப் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டைட்டல் டீசர் இன்று வெளியானது. படத்திற்கு கராத்தே பாபு என பெயரிடப்பட்டுள்ளது.