Rathnam Movie Twitter Review in Tamil: இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், நடிகை பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ரத்னம்’ . தாமிரபரணி, பூஜை ஆகிய விறு விறு ஆக்ஷன் படங்களின் வரிசையில் தற்போது 3ஆவது முறையாக ஹரி - விஷால் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ள நிலையில் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் - ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ள நிலையில், ஹரியின் ஆஸ்தான இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


முன்னதாக படத்தின் டீசர் வெளியானபோதே வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து தன் படத்துக்கு திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் திரையரங்குகள் கிடைக்காததாகவும், ரத்னம் பட விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாகவும் விஷால் பரபரப்பு புகாரை நேற்று எழுப்பி இருந்தார். இந்த சிக்கல்கள் எல்லாம் தாண்டி ரத்னம் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரத்னம் படம் ரசிகர்களைக் கவர்ந்ததா, ‘எக்ஸ்’தள வாசிகளின் விமர்சனம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்!






“ரத்னம் முதல் பாதி நன்றாக உள்ளது. சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சி சிறப்பு. இடைவேளைக் காட்சி செம. தாமிரபரணி விஷாலைப் பார்த்த உணர்வு” எனக் கூறியுள்ளார்.


 






“என்ன என்னவோ நடக்குது, ஆனா சண்டை மட்டும் தான் இருக்கு. இரண்டாம் பாதி நல்லா இருக்கும்னு நம்பறேன்” எனக் கூறியுள்ளார்.


 






“சூப்பர் முதல் பாதி. நான்கு ஆக்சன் ப்ளாக்குகள், நான்கு பாடல்கள். கலர் கிரேடிங் தான் பிரச்னை” எனக் கூறியுள்ளார். 


 






“ரத்னம் முதல் பாதி. பழைய பாணியிலியே எடுத்துள்ளார். பிஜிஎம் எடுபடவில்லை. படம் ஒன்றவைக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.


 






“ஹரியின் ட்ரேட்மார்க் படம், சிங்கிள் டேக் சேஸிங் காட்சி அருமை” எனக் கூறியுள்ளார்.