நாள்: 24.03.2023 - வெள்ளிக்கிழமை


நல்ல நேரம் :


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை




இராகு :



காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


குளிகை :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


எமகண்டம் :


மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


வெளியிடங்களில் கோபத்தை விட விவேகத்தை கையாளவும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். எண்ணிய சில பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பயனற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய துறைகள் மீது ஆர்வம் உண்டாகும். உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றங்கள் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.


ரிஷபம்


சிகை அலங்கார பணிகளில் லாபம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். தேவையற்ற வாதங்களினால் விரயங்கள் நேரிடலாம். மனதில் வெளிநாடு செல்வது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.


மிதுனம்


மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். சபை நிமிர்த்தமான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பெருமை நிறைந்த நாள்.


கடகம்


ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். நிறைவான நாள்.


சிம்மம்


ஆராய்ச்சி சார்ந்த செயல்களில் கவனத்துடன் இருக்கவும். தந்தைவழி உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் உள்ள சில நுணுக்கங்களை அறிவீர்கள். தனித்திறமைகளை புரிந்து கொள்வதற்கான சூழல் அமையும். நீண்ட தூர பயணங்கள் செல்வது சார்ந்த எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படும். விரயங்கள் நிறைந்த நாள்.


கன்னி


தனம் தொடர்பான நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.


துலாம்


சுபகாரியம் நிமிர்த்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.


விருச்சிகம்


கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் புரிதல் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். எந்தவொரு செயல்பாட்டிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.


தனுசு


கல்வி பணிகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கற்பனை கலந்த உணர்வுகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மகிழ்ச்சி உண்டாகும் நாள்.


மகரம்


மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தாய் வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். இயற்கை மருத்துவம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். அமைதி நிறைந்த நாள்.


கும்பம்


கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். மனதில் எண்ணியதை வித்தியாசமான முறையில் நிறைவேற்றி கொள்வீர்கள். மனதில் புதிய நம்பிக்கையுடன் முக்கிய முடிவினை எடுப்பீர்கள். பாகப்பிரிவினை சார்ந்த முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். எதையும் சமாளிக்கக்கூடிய பக்குவம் உண்டாகும். அதிரடியான சில செயல்களின் மூலம் வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். லாபகரமான நாள்.


மீனம்


சவாலான வாதங்களையும் சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள். விரும்பிய உணவினை உண்டு மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.