புஷ்பா 2:
சுகுமாரின் இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, நடிப்பு அசுரன் பகத் ஃபாசில், அனசுயா பரத்வாஜ், சுனில், பிரம்மாஜி மற்றும் ஜெகதீஷ் உள்ளிட்டோர் நடித்த புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இன்டர்நேஷனல் அளவிற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது.
அல்லு அர்ஜுன்:
பீகார் மாநிலம் பாட்னாவில் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு நடத்தப்பட்ட பிரம்மாண்ட நிகழ்வில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, இயக்குனர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி நடைபெற்ற காந்தி மைதானமே நிரம்பி வழியும் அளவிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இதில் பங்கேற்றனர். இதனால் அல்லு அர்ஜுனின் ஸ்டார் வேல்யூ ஒரே நாளில் ஓஹோவென கூடியிருக்கிறது.
ராஷ்மிகா ரசிகர்கள்:
ஆனால் அதே சமயம், புஷ்பா 2 டிரெய்லரைப் பார்த்து ராஷ்மிகா மந்தனா ரசிகர்கள் தான் மனக்குமுறலில் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு சந்தீப் ரெட்டி வாங்காவின் பிளாக்பஸ்டர் ஃபேமிலி க்ரைம் மூவியான அனிமலில், ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். இதில் அப்பா மீது அளவுக்கு அதிகமான பாசம் கொண்ட கனவனாக வரும் ரன்பீர் கபூர், ராஷ்மிகாவிடம் சைக்கோ கணவர் போல் நடந்துகொள்வார்.
அனிமல் திரைப்படம்:
குறிப்பாக தனது தந்தையைப் பற்றி ஏதாவது பேசினாலே ராஷ்மிகா மந்தனாவை அடித்து துன்புறுத்துவார். ஆனால் அடுத்த நிமிடமே காதல் வழிய டைலாக் பேசுவார். இதனாலேயே இந்த படத்தில் ரன்பீர் கபூர் கேரக்டர் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
புஷ்பா 2 ட்ரைலர்:
நேற்று வெளியான புஷ்பா 2 ட்ரெய்லரில் ராஷ்மிகா மந்தனாவின் கால்களை பிடித்து அல்லு அர்ஜுன் தனது தாடியைத் தடவி புஷ்பா ஸ்டைலை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
அத்துடன் , “கணவன் தன் மனைவி சொல்றதைக் கேட்டால் என்ன நடக்குன்னு இந்த உலகம் பாக்கப்போகுது” என்ற டைலாக் வேறு வருகிறது. ஆனால் புஷ்பாவின் இந்த சைகை ஸ்ரீவள்ளியை கடுப்பேற்றியது போல தான் ராஷ்மிகாவின் ரியாக்ஷன்கள் இருந்தது. இதை ராஷ்மிகாவின் ரசிகர்கள் நோட் செய்ய தவறவில்லை.
ராஷ்மிகாவை நினைத்து புலம்பும் ரசிகர்கள்:
இந்த காட்சிகளை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வரும் ரசிகர்கள், “அது என்ன ஆன் ஸ்கிரீனில் ராஷ்மிகா மந்தனாவிற்கு ஒரு நல்ல கணவர் கிடைக்கமாட்டேங்கிறாங்க... இப்படி விநோதமான ஆட்களாகவே மாட்டுறாங்க” என புலம்பி வருகின்றனர்.
குறிப்பாக இந்த ரெண்டு படங்களிலும் ஏழை பெண்ணான ராஷ்மிகா மந்தனா பணக்கார ஆண்களை திருமணம் செய்திருப்பார். இதனைச் சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன் ஒருவர், “ஏழை பெண்ணான அவருக்கு ஏன் நார்மலான கணவர் கிடைப்பதில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார்.