ரன்வீர் சிங்


இந்தியத் திரையுலகில் மிகப் பிரபலமானவர், பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங். இவரது முதல் படமான "பேண்ட் பாஜா பாராத்" என்ற படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். எப்பவுமே தனக்கென ஒரு தனி ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் கொண்டவர் ரன்வீர் சிங்.


ஃபேஷன், மாடலிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ரன்வீர், தனது ஹேர் ஸ்டைலையும் அவ்வப்போது  மாற்றிக்கொள்வது அவரின் ஸ்பெஷாலிட்டி. எப்போதும் தன்னைச் சுற்றி ஒரு உற்சாகமான சூழலை உருவாக்கியபடியே இருப்பார் ரன்வீர். மேலும் சக நடிகர்களின் மீதான தனது அன்பையும் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படுத்தி வருபவர். தற்போது முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனியுடன் ரன்வீர் சிங் வெளியிட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


முத்தங்கள் பகிர்தல்!


 சமீப காலங்களில் நடிகர்கள் தங்களது சக நடிகர்கள் மற்றும் ஒரு சக ஆணுக்கு பொது இடங்களில் மற்றும் மேடை  நிகழ்ச்சிகளில் முத்தங்கள் வழங்குவது பிரபலமாகி வருகிறது. இன்றைய தலைமுறை நடிகர்கள் கெட்டிதட்டி போய் இறுக்கமான மனநிலைகளை மேடைகளில் கடைப்பிடிக்காமல் ஒருவருக்கு ஒருவர் லவ் யூ சொல்லிக் கொள்வது , கட்டிப்பிடித்துக் கொள்வது, கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்ற செயல்களால் ரசிகர்களின் மனதை கவர்கிறார்கள்.


லவ் யூ!


இதற்கு சூப்பரான ஒரு உதாராணம் சொல்ல வேண்டும் என்றால் விஜய் சேதுபதியை சொல்லலாம். தனக்கு பிடித்த நடிகர்கள் கமல், ஷாருக் கான் என அனைவருக்கும் மேடைகளில் லவ் யூ சொல்லிவிடுவார். சமீபத்தில் ஜவான் திரைப்படத்திற்கான நிகழ்ச்சியில் ஷாருக் கான் மற்றும் விஜய் சேதுபதி ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி லவ் சொல்லிக்கொண்டு நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று பேசிக்கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.


தோனிக்கு முத்தம் கொடுத்த ரன்வீர்






இந்நிலையில் விஜய் சேதுபதியைப் போலவே பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் தல தோனியை சந்தித்த தருணத்தில் அவருக்கு முத்தம் கொடுத்து கவனமீர்த்துள்ளார். தனது அன்பை எல்லாம் கொட்டித் தீர்க்கும் வகையில் தோனிக்கு முத்தம் கொடுத்து அந்தப் புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.


இனி வரும் காலங்களில் முரட்டுத்தனமாக, இறுக்கமாக இல்லாமல் எல்லா நடிகர்களும் எல்லா ஆண்களும் தங்களுக்கு பிடித்த இன்னொரு ஆணுக்கு எந்தவித தயக்கமோ கூச்சமோ இல்லாமல் முத்தம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்