ராமாயணா க்ளிம்ப்ஸ்
ஆமீர் கான் நடித்த தங்கல் படத்தின் இயக்குநர் தற்போது இதிகாச கதையான ராமாயணத்தை படமாக்கியுள்ளார். ரன்பீர் கபூர் இதில் ராமர் கதாபாத்திரத்திலும் சாய் பல்லவி சீதையாக நடித்துள்ளார். கே.ஜி.எஃப் நடிகர் யாஷ் ராவணனனாக நடித்துள்ளார். சன்னி தியோல் அனுமன் வேடத்திலும் ரவி துபே லட்சுமணன் வேடத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசைகலைஞர் ஹான்ஸ் ஸிம்மர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக சுமார் ரூ 835 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது ராமாயணா திரைப்படம் . இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது