ஐந்து வருடங்களாக நாங்கள் ஒன்றாக நேரத்தை செலவழித்த பால்கனியே திருமண மேடையாக மாறியிருக்கிறது என்னும் அழகான வாசகத்துடன் திருமண புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் ஆல்யா பட்.
தனது இன்ஸ்டாகிராம் செய்தியில், "எங்கள் பால்கனியிலேயே திருமணம் நிகழ்ந்திருக்கிறது. இனி அன்பை, முத்தங்களை, செல்ல சண்டைகளின் நினைவுகளை ஒன்றாக கட்டியமைக்கப்போகிறோம். மிக முக்கியமான இந்த நேரத்தில் உங்கள் அனைவரின் அன்புக்கும் என் நன்றி. இந்த அன்பு எங்களுடன் இருக்கும்” என தெரிவித்திருக்கிறார் ஆல்யா பட்
பாலிவுட்டில் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக மாறியிருக்கிறது ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரின் திருமணம். ஆல்யா மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலாக காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் கடந்த ஓரிரு வருடங்களாகவே இருவரும் , தங்களின் உறவு குறித்து மேடைகளிலும் , நேர்காணல்களிலும் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த ஹாட் ஜோடியின் திருமணம் இன்று நடந்து வருகிறது. இந்தத் திருமணத்தில் ரன்பீர், ஆலியா குடும்பத்தினர் உட்பட பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் காலையில் இருந்தே சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் ஆல்யா தற்போது திருமணம் ஃபோட்டோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான கங்குபாய் கத்தியாவாடி என்னும் Biopic மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றார் ஆல்யா. சஞ்ஜய் லீலா பன்சாலி இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் மிகுந்த உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தியவர் என கொண்டாடப்படுகிறார் ஆல்யா பட்.
பாலிவுட்டின் செல்ல ஜோடிக்கு நம் வாழ்த்துக்கள்