தமிழில்  ‘டம்மி டப்பாசு’ படத்தில் அறிமுகமான ரம்யா பாண்டியன், அதனைத்தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’படத்தில் நடித்தார்.  இந்தப் படம் இவருக்கு நல்லப்பெயரை பெற்றுத்தந்தது. அதனைத்தொடர்ந்து, குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 2 ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபெற்றார். இதன் மூலம் மேலும் பிரபலமான ரம்யா பாண்டியன், சூர்யா தயாரிப்பில் வெளியான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்தார்.


அதனைத்தொடர்ந்து, தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் லியோ ஜோஸ் பெல்லிஸ்ரி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாக இருக்கும் இந்தப்படத்தின் ஷீட்டிங் தற்போது பழனியில் சென்று கொண்டிருக்கிறது. மலையாள இயக்குநர் அசோகனும் இந்தப்படத்தில் நடித்து வருகிறார். 






இந்தநிலையில், எப்பொழுதும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் தனது உடை சார்ந்தும், உடல் சார்ந்தும் பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில், ரம்யா பாண்டியன் "விண்ணை தாண்டி வருவாயா" படத்தில் வரும் திரிஷா போன்று சேலை அணிந்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண