தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகை ரம்பா. அவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தாலும் ரசிகர்கள் இன்னும் அவரை மறக்கவே இல்லை. அன்று இருந்தது போலவே அவருக்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 


 



 


 


1997ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, விசு, வடிவுக்கரசி, செந்தில், ஜனகராஜ் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்களின் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் 'அருணாச்சலம்'. இப்படத்தில் ரஜினியை ஒரு தலையாக காதலிக்கும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் நடிகை ரம்பா.


சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரம்பா தன்னுடைய சினிமா அனுபவம் குறித்து பல ஸ்வாரஸ்யமான தகவல்களை குழந்தைத்தனம் மாறாமல் அழகாக பேசி இருந்தார். அப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசிய வீடியோ கிளிப்பிங் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


 


 



ரஜினியின் விளையாட்டுத்தனம் :


அடிக்கடி செட்டில் ஏதாவது ஒரு ஃபன் பண்ணுவார் ரஜினி சார். அவர் ரொம்பவும் ஜாலியானவர் என்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது. ஒரு நாள் மதியம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லா லைட்களும் ஆஃப் ஆயிடுச்சு. எல்லா இடமும் இருட்டா இருந்துது அப்போ யாரோ என்னோட தோளில் தட்டி விட்டு சென்றார்கள். நான் அப்படியே அலறிவிட்டேன். உடனே லயிட் வந்ததும் ரஜினி சார் எல்லாரிடமும் யார் ரம்பா மேலே கையை வச்சது என ட்ராமா போட்டார். எப்பவுமே இப்படித்தான் ஏதாவது விளையாட்டு தனமா பண்ணிட்டு இருப்பார் ரஜினி சார் என நடிகை ரம்பா அந்த வீடியோவில் பேசி இருந்தார். 


ஆனால் இந்த வீடியோ கிளிப்பிங்கை வேறு மாதிரி கட் செய்து இணையத்தில் பரப்பி வருகிறார்கள். அடுத்த சூப்பர் ஸ்டார் பிரச்சினை என்று வெடித்ததோ அன்று முதல் ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே பெரும் வாக்குவாதம் சோசியல் மீடியா மூலம் நடைபெற்று வந்தது. ஆனால் ஒரே சூப்பர் ஸ்டார்தான் என நடிகர் விஜய் லியோ சக்சஸ் மீட்டில் பேசி முற்றுப்புள்ளி வைத்தார்.    


ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள் :


தற்போது ரம்பா பேசியுள்ள இந்த வீடியோவை "ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி" என்ற ஹேஷ்டேக்குடன் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்ஸ். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முழு வீடியோவையும் போய்  பாருங்க. அதில் ரம்பா மிகவும் சாதாரணமாக தான் பேசியிருக்கிறார் என ரஜினி ரசிகர்கள் போஸ்ட் செய்துள்ளனர்.