நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய்பல்லவி மற்றும் யாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ராமாயணா. இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை தழுதி எடுக்கப்பட்டுள்ள ரன்பீர் கபூர் ராமராகவும், சாய்பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
நவ.5இல் திரைக்கு வர உள்ள ராமாயணா
ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹாலிவுட் புகழ் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்துள்ள இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தின் முதல்பாகம் வருகிற நவம்பர்-5 ஆம்தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தசரா பண்டிகையான கடந்த 20 ஆம் தேதியன்று இத்திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியது.
இரண்டு நாட்களில் ரூ.5.33 கோடி வசூல்
முன்பதிவு தொடங்கி இரண்டு நாட்களுக்குள் 1.28 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் ரூ.5.33 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படம் திரைக்கு வருவதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், டிக்கெட்டுக்களை வாங்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ், இந்தி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாக உள்ள இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்குமென படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
