தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம்சரண். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளனமான ரசிகர்கள் உள்ளனர். இந்த ரசிகர்கள் ராம்சரண் மீதுள்ள அன்பை பரிசு பொருட்களை கொடுப்பதன் மூலமாகவும்,  அவரது படங்களை கொண்டாடுவதன் மூலமாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது ஜெய்ராஜ் என்ற ரசிகரும் இணைந்திருக்கிறார். ஆனால் ராம் சரண் மீதான அன்பை இவர் வெளிகாட்டிய விதம் சற்று வித்தியாசமானது.



                                                                 


ஆம், ராம்சரனுக்காக கிட்டத்தட்ட 264 கிமீ தூரம் நடந்து வந்த ஜெய்ராஜ், தனது நிலத்தில் விளைவித்த அரிசியை கொண்டு வரைந்த ராம்சரன் புகைப்படத்தையும் அத்துடன் இரண்டு அரிசி மூட்டைகளையும் பரிசாக கொண்டு வந்துள்ளார். 





ஜெயராஜ் இவ்வாறான பரிசை கொண்டு வந்துள்ளார் என்ற தகவலை கேள்விபட்டதும், தனது பிஸியான நேரநெருக்கடியிலும் அவரை வீட்டிற்கு அழைத்து பேசியுள்ளார் ராம்சரண் அப்போது ஜெயராஜ் தான் எப்படி அதனை உருவாக்கினேன் என்பதையும் விளக்கியிருக்கிறார். இதைப்பார்த்த ராம்சரண் நெகிழ்ந்து விட்டாராம். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




 


ராம்சரண் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC15  படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இந்தப்படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 






கியாரா அத்வானி நடிகையாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் நடிகை அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.