பாலிவுட் திரையுலகில் கவர்ச்சியாலும், தன் வெளிப்படையான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களாலும் கவனமீர்த்து சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் ராக்கி சாவந்த்.


1997ஆம் ஆண்டு பாலிவுட்டில் அக்னிசத்ரா படத்தின் மூலம் அறிமுகமான ராக்கி, தொடர்ந்து தன் கவர்ச்சியான கதாபாத்திரங்களால் கவனமீர்த்து வந்தார். 2009ஆம் ஆண்டு சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தி கணவரைத் தேர்ந்தெடுத்த ராக்கி சாவந்தின் செயல் நாடு முழுவதும் பெரும் கவனமீர்த்தது.


எனினும் இந்நிகழ்ச்சியில் வெற்றியாளரை ராக்கி மணக்காத நிலையில், மும்பை தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை 2019இல் ரகசியத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனக்கு திருமணமான ரகசியத்தை இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உடைத்தார்.


தொடர்ந்து கருத்து வேறுபாடுகளைக் கடந்து இவருடன் விவாகரத்து ஏற்பட்ட நிலையில், ஆதில் கான் துரானி என்பவரை ராக்கி தற்போது காதலித்து வருகிறார்.


 முன்னதாக மராத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராக்கி சாவந்த் இறுதிக் கட்டத்தில் 9 லட்சம் அடங்கிய பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார். நேற்று (ஜனவரி.08) முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், தன் அம்மா பிரைக் ட்யூமரால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்டிருக்கும் தன் அம்மாவுக்காக ரசிகர்கள் பிரார்த்திக்கும்படியும் கோரி தன் இன்ஸ்டா வீடியோ பகிர்ந்துள்ளார்.


மேலும் தன் அம்மா முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக மட்டுமே பிக் பாஸ் குழுவினர் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறி வருத்தப்பட்டுள்ள ராக்கி, அழுதபடி தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 






இந்நிலையில், ராக்கி சாவந்தின் இந்த வீடியோவில் அவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.