Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Nana Patekar Passed Away: ரஜினியின் காலா திரைப்படத்தில் வில்லனாக நடித்த நானே படேகர் திடீரென உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Nana Patekar Passed Away: நானே படேகர் வீட்டில் சுயநினைவின்றி விழுந்து கிடந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் நானே படேகர் மரணம்?
இந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தனது அசாத்திய நடிப்பு திறமையால் புகழ்பெற்ற, நடிகர் மரணமடைந்ததாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவாவின் டோனா பவுலாவில் உள்ள தனது வீட்டில் அவர் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி படேகர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இவரது மறைவிற்கு ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றன. இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் மேலும் ஒருவரை நாம் இழந்துவிட்டோம் என வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
நானா படேகர் வீட்டில் நடந்தது என்ன?
75 வயதான நானா படேகர் மரணமடைந்ததாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிகாலை 5:20 மணிக்கு நானா படேகர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு, மருத்துவர்கள் சுமார் 45 நிமிடங்கள் அவரை மீண்டும் சுயநினைவுக்குக் கொண்டுவர முயன்றனர், ஆனால் அதில் எந்த பலனும் இல்லாததால் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
நானே படேகர் திரைப்பயணம்:
நானா படேகர் மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகர் ஆவார். 1978 ஆம் ஆண்டு காமன் திரைப்படத்தில் அறிமுகமானார். பரிந்தா, பிரஹார், அங்கார், கிராந்திவீர், திரங்கா, காமோஷி மற்றும் அப் தக் சப்பான் போன்ற அவரது படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலம் கடந்த 2008ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான காலா திரைப்படத்தில், ஹரி தாதா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பெரும் வரவேற்பை நானா படேகர் பெற்றார்.
கடைசியாக அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், ரித்தீஷ் தேஷ்முக் மற்றும் பலரது நடிப்பில் வெளியாகி இருந்த 'ஹவுஸ்ஃபுல் 5' படத்தில் இடம்பெற்றுய் இருந்தார். ஷாஹித் கபூர் மற்றும் திரிப்தி திம்ரி நடித்த விஷால் பரத்வாஜின் 'ஓ'ரோமியோ' படத்திலும் நடித்து இருந்தார். அனில் கபூர் மற்றும் ராதிகா மதன் நடித்த 'சுபேதார்' படத்திலும் அவர் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நானே படேகர் நடித்து இருந்தார். 50-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர், 1991ம் ஆண்டு வெளியான ப்ரஹார்: தி ஃபைனல் அட்டாக் எனும் திரைப்படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார்.
நானே படேகர் குடும்ப வாழ்க்கை:
1978ம் ஆண்டு நீல்கந்தி என்பவரை நானே படேகர் திருமணம் செய்தார். காலப்போக்கில் இவர்கள் விவாகரத்து செய்யாமலேயே பிரிந்து வாழ தொடங்கினர். இந்த தம்பதிக்கு பிறந்த முதல் குழந்தை 2 வயதிலேயே உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. இதையடுத்து பிறந்த மல்ஹர் படேகர் லண்டனில் படித்து, தற்போது நானே சாஹேப் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















