நடிகை ஸ்ரீதேவி பற்றியும், அவரைச் சுற்றி வலம் வந்த கிசுகிசுக்கள் பற்றியும் மூத்த பத்திரிக்கையாளர் சபிதா சோசப் கூறியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஸ்ரீதேவியைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: சென்னையில் சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்திற்கு பின்புறம் தான் ஸ்ரீதேவியின் வீடு இருந்தது. அதற்கு முன்பு அவர் வேறொரு வீட்டில் இருந்தார். ஸ்ரீதேவி எல்லா படங்களிலும் நடித்து பிரபலமானார். அப்படி தான் மார்வாடி சேட் ஸ்ரீதேவியை பார்க்க சென்னை வந்துள்ளார்.


பிற்பகல் வரையில் அவரது வீட்டு வாசலில் நின்றிருந்தும் கூட ஸ்ரீதேவியை பார்க்க அனுமதிக்கவில்லை. அப்போது தான் நீங்கள் ஒரு தயாரிப்பாளர் என்று சொல்லிப்பாருங்கள். உங்களை வீட்டிற்குள் விடுவார்கள் என்று டாக்ஸி டிரைவர் ஒருவர் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னபடியே ஸ்ரீதேவி வீட்டிற்குள் சென்று தான் ஒரு தயாரிப்பாளர் என்றும், ஸ்ரீதேவியை பாலிவுட்டில் நடிக்க வைக்க விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.



Rajinikanth: 22 லட்சம் வீட்டின் ரகசியம்; பொண்ணு கேட்டு போன ரஜினியை  மூச்சில் அடித்தபோல் பேசிய நடிகையின் தாயார்!


மேலும் நீங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு ரூ.18 லட்சம் என்று சொல்லவே, உடனே அந்த தயாரிப்பாளர் ரூ.22 லட்சம் தருவதாக சொல்லிருக்கிறார். அதுமட்டுமின்றி படம் குறித்து விவாதிக்க வர வேண்டும் என்று கூறி ரூ.22 லட்சத்தை கொடுத்திருக்கிறார். அந்தப் படத்தில் அவர் நடித்தாரா இல்லையா? என்பது தெரியாது. ஆனால் அவர் பெட்ரா ரூ.22 லட்சத்தை வைத்து தான் சைதாப்பேட்டையில் கோர்ட்டுக்கு பின்புறம் உள்ள வீட்டை வாங்கினார்.


பின்னர் ஸ்ரீதேவியின் அழகு மற்றும் நடிப்பு ஆகியவற்றின் மீது ஆசைப்பட்ட ரஜினிகாந்த் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அவரது வீட்டிற்கு பெண் கேட்டு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஸ்ரீதேவியின் அம்மா, தனது மகள் இப்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், சினிமாவில் அவர் அடுத்தடுத்த இடங்களுக்கு முன்னேறி செல்ல வேண்டும் என்று கூறி ரஜினியின் விருப்பத்தை மறுத்து மூச்சில் அடித்தபோல் பேசி அனுப்பியுள்ளார்.





அவரது அம்மா ஆசைப்பட்டபடி ஸ்ரீதேவி பாலிவுட்டில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தார். அங்கு நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு போனி கபூர் பாதுகாப்பாக இருந்தார். மேலும், ஸ்ரீதேவியின் அம்மாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட போதிலும் அவர் தான் மருத்துவமனையில் சேர்த்து கவனித்துக் கொண்டார். அவர் இறந்த போதும் கூட ஸ்ரீதேவிக்கு ஆறுதலாக இருந்துள்ளார். 


கஷ்டம் மற்றும் துன்பத்தில் இருக்கும் போது காட்டும் அன்பும், ஆதரவும் தான் அவர்கள் மீது நம்பிக்கையை வர வழைக்கிறது. அப்படித்தான் ஸ்ரீதேவிக்கு போனி கபூர் மீது நம்பிக்கை வந்து கடைசியில் அவரையே திருமணம் செய்து கொண்டார். அப்படித்தான் குஷ்பு வாழ்க்கையை வெறுத்து தவித்த போது சுந்தர் சி தான் அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அவர் மீது அன்பு காட்டி வந்துள்ளார். அந்த அன்பும் ஆறுதலும் தான் அவர்களது திருமணத்திற்கு காரணமாகவும் இருந்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.