வேட்டையன்
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் , ரானா டகுபதி , துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
இணையத்தில் கசிந்த வேட்டையன் பட காட்சிகள்
ஒவ்வொரு பெரிய படம் வெளியாகும் போதும் ரசிகர்கள் அந்த படத்தின் முக்கியமான காட்சிகளை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இது ஒரு திரைப்படத்தை முழுமையாக ரசிக்கும் அனுபவத்தை கெடுக்கிறது. கடந்த ஆண்டு ஜெயிலர் படத்தின் மொத்த காட்சிகளும் பிட்டு பிட்டாக இணையத்தில் பரவியது . சமீபத்தில் வெளியான விஜயின் தி கோட் படத்திற்கு இதே நிலைமைதான். தற்போது வேட்டையன் படத்தின் முக்கியமான காட்சிகளை செல்ஃபோனில் வீடியோ எடுத்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்த மாதிரியா செயல்களில் ஈடுபட வேண்டாம் என படக்குழுக்கள் ஒவ்வொரு முறையும் கோரிக்கை வைத்தும் எச்சரித்தும் வருகின்றன..அப்படி இருந்து ரசிகர்கள் இந்த செயலை செய்து வருவது மற்ற ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.