கூலி ஆடியோ லாஞ்ச்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. பிற நாடுகளில் படத்திற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. முன்பதிவுகள் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 10 ஆயிரத்திற்கு மேலான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு , மலையாளம் , கன்னடன் என படத்திற்கு அனைத்து மொழிகளிலும் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறார். வசூல் ரீதியாகவும் கூலி படம் பெரும் சாதனை படைக்கும் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அனிருத் இசையில் இதுவரை கூலி படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. இதில் சமீபத்தில் வெளியான கூலி த பவர்ஹவுஸ் பாடல் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மற்ற பாடல்களான மோனிகா , சிகிட்டு பாடலும் பரவலாக கவனமீர்த்துள்ளன. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.