முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ் போன்ற இயக்குநர்கள் என் கேரியரை உயர்த்தியவர்கள்; இப்போது நெல்சனும் இந்தப் பாதையில் இருக்கிறார் என ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜெயிலர் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், பேசிய நடிகர் ரஜினிகாந்த் “நெல்சன் எனக்கு ஒரு கதை சொன்னார். எனக்கு அந்தக் கதை பிடிச்சிருக்குனு சொன்னேன். பீஸ்ட் ஷூட்டிங் முடிந்து 10 நாள்களில் விரிவாக கதை சொல்வதாக கூறினார். 10 நாளைக்குப் பின் பீஸ்ட் ஷூட் முடிஞ்சு வந்து கதை சொன்னார் . அற்புதமாக இருந்தது.
இந்தப் படம் பாட்ஷா மாதிரி இருக்குமானு தெரியல, ஆனா அதுக்குலாம் மேல இருக்கும். நீங்க தான் பாத்துட்டு சொல்லணும். ப்ரோமோ ஷூட் செய்து படத்தை அறிவித்தோம். அதன் பிறகு பீஸ்ட் வெளியானது. பீஸ்ட் எதிர்மறையான விமர்சனங்களைக் கொண்டிருந்தது. அது சரியாகப் போகவில்லை. இயக்குனரை மாற்றுமாறு விநியோகஸ்தர்களிடமிருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வந்தன.
நாங்கள் அனைவரும் சன் டிவி குழுவுடன் ஒரு சந்திப்பு நடத்தினோம். சன் டிவி டீம் சொன்னது, உண்மைதான் சார். விமர்சனங்கள் மோசமாக உள்ளன. ஆனால் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் இல்லை, பாக்ஸ் ஆபிஸில் நன்றாக இருக்கிறது என்று சன் டிவி டீம் என்னிடம் கூறியது” என்றார்.
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த்,” சூப்பர் ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லைதான். ஹூக்கும் பாடலில் சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை மட்டும் நீக்க சொன்னேன். பாடல் அற்புதமாக இருந்தது.” என்றார்.
காவாலயா பாடல் ஷூட்
காவாலயா பாடல் ஹூட்டிங் பற்றிய பேசிய ரஜினிகாந்த் ,”ஆறு நாட்கள் மட்டுமே இருந்தன; காட்சிகள் முடிக்கப்பட்டுவிட்டன. நான் ‘காவலயா’ பாடல் ஷூட்டிற்காக காத்திருந்தேன். முதல் மூன்று நாட்கள் எனக்கு கால வரவேயில்லை.நான் கண்ணனிடம் கேட்டேன். அப்போது அவர்கள் ‘ நாளைக்குதான் ஷூட்டிங். அதுவும் ஒரு ஸ்டெப்.” என்றார்கள். ஜானி மற்றும் தம்ன்னா அந்தப் பாடலில் அசத்தியிருக்கிறார்கள். ” என்று சுவாரஸ்யமுடன் பகிர்ந்து கொண்டார்.