பாக்யராஜின் 50 ஆண்டுகால திரை வாழ்வை முன்னிட்டு அவருக்கு பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் தனது வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தை பகிர்ந்துள்ளார். 

Continues below advertisement

சிவாஜி பாராட்டு விழா:

அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது, 1995ம் ஆண்டு மலேசியாவில் சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கினார்கள். அதற்காக சினிமாத்துறை முழுவதும் அவரை பாராட்ட வேண்டும். அரசும் சேர்ந்து பாராட்ட வேண்டும் என்று சேப்பாக்கத்தில் அந்த விழா வைத்திருந்தார். 

அதற்கு முதலமைச்சர்தான் சிறப்பு விருந்தினர். அவர் தலைமையில்தான் அந்த விழா. ப்லிம் சேம்பர்ல 3 பஸ். அனைத்து கலைஞர்களும் அங்கே சென்று சேப்பாக்கத்தில் பேச வேண்டும். அனைவரும் பேசி முடித்த பிறகு நன்றி சொல்லுமாறு என்னை கூறியிருந்தனர். 

Continues below advertisement

ஜெயலலிதாவிடம் ஆவேசமாக பேசிய ரஜினி:

நான் நன்றி சொல்லும்போது முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பார்த்து, கொஞ்சம் ஆவேசமாக பேசினேன். கோபத்துக்கு ஆயுசு குறைவு. ஆனால், கோபத்தில் உதிர்ந்த வார்த்தைகள் ஆயுள் ரொம்ப அதிகம். அதனால்தான் கோபமாக இருக்கும்போது வார்த்தைகளை அளந்து அளந்து பேச வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

ஆவேசமாக பேசும்போது கண்டிப்பாக முதலமைச்சருக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்கே சிவாஜி ரசிகர்கள் இருந்தாலும் அதிமுக விழா என்பதால் தொண்டர்கள், கட்சியினர் இருந்தனர். அனைத்தும் முடிந்து போகும்போது நான் ஏதோ பேசிவிட்டேன். அனைவரது முகமும் ஒரு மாதிரி இருக்கிறது. 

கல்லால் அடித்தார்கள்:

சேப்பாக்கத்துல ஒரு 50, 60 ஆயிரம் பேர். திறந்த ஜீப்பில் அனைவரும் பார்க்க வேண்டும் என்று சிவாஜி சாரை முழுவதும் கூட்டிச் செல்கிறோம். அனைவரும் கோபமாக இருக்கிறார்கள். நீங்கள் வேண்டாம் என்று விஜயகுமார் கூறினார். நான் வர்றேன் என்று கூறி திறந்த ஜீப்பில் நானும் போகிறேன். 

போகும்போதே சிலர் கல்லால் அடித்தார்கள். கத்தினார்கள். பாட்ஷா அப்போது ரிலீஸ் ஆகியிருந்தது. ரசிகர்கள் எல்லாம் என்னைச் சுற்றி ஆட்டோகிராஃப் கேட்டு சுற்றியதும், நாங்கள் வந்த 3 பேருந்தும் கிளம்பிச் சென்றுவிட்டது. நான் எங்கே போறது என்று தெரியவில்லை?

அடித்தார்கள்:

ஒரு குரூப் இந்த பக்கம் வாங்க சார்னு கூப்பிட்டு போறாங்க. ஒரு குரூப் இந்த பக்கம் இழுத்துட்டு போறாங்க. சிலர் தலையில் அடிக்கிறார்கள். சிலர் கிள்ளுகிறார்கள். நல்லா தெரியுது. சிலர் திட்றாங்க. எனக்கு புரியுறதுக்குள்ள அங்கே ஒரு குரல் கேட்கிறது. 

எங்கே போறீ்ங்க? எங்கே போறீங்க?னு பாக்யராஜ் ஓடி வர்றாரு. எங்கே கூப்பிட்டு போயிட்டு இருக்கீங்க? யாருனு சொல்லி இங்கே வாங்கனு என்னை கூப்பிட்டு போனாரு. போலீஸ் ஜீப் இருந்தது. அங்கே ஒரு எஸ்ஐ இருந்தார். அவர் பார்த்துக்கொண்டே இருந்தார். 

காப்பாற்றிய பாக்கியராஜ்:

சிஎம் பத்தி இப்படி பேசியிருக்கேன். இவனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றால் அவர்களுக்கு ஏதும் ரிமார்க் ஆகி, வேலையை விட்டுத் தூக்கிவிடுவார்களோனு பயம் என்று நினைக்கிறேன்.  அவர் அப்படியே இருக்கிறார். 

பாக்யராஜ் சார் கோபத்தில் என்ன சார் பண்றீங்க? ஒரு ஆர்ட்டிஸ்ட்டை தள்ளிட்டு போயிட்டு இருக்காங்க. வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்களா? எடுங்க ஜீப்பை உக்கார வச்சு, கொண்டு போய் வீட்ல விடுங்க. எழுதுங்கடா ஜீப் நம்பர்னு. நான் விடமாட்டேன் மீடியாவுல சொல்லிடுவேன். அவரை பத்திரமா கொண்டு போய் சேக்கனும்னு சொன்னாரு.

நன்றி சொன்ன ரஜினி:

அந்த எஸ்ஐ பயந்துட்டு ஓகே ஓகேனு சொல்லி என்னை ஜீப்ல உட்கார வச்சு, பூர்ணிமா அங்கதான் இருக்காங்க. இல்லாவிட்டால் நானும் வந்துடுவேன். நீங்க வீட்டுக்கு போகவும் எனக்கு போன் பண்றீங்க. அந்த போலீசிடமும் நீங்களும் போன் பண்றீங்க. அப்படி சொல்லவும் என்னை பத்திரமாக ஜீப்ல கொண்டு வந்து வீட்ல கொண்டு வந்தாங்க. அப்புறம் அவரே போன் பண்ணி சார் நீங்க பேசிடுங்கனு பேசுனாரு. என்னால மறக்கவே முடியாது. எவ்வளவு நன்றி சொன்னாலும் அது தீராது. நல்ல உள்ளம். நீண்ட நாள் ஆயுளுடன் இருக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.