தளபதி


மணிரத்னம் இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளியான படம் தளபதி. வில்லனாக கரியரைத் தொடங்கிய பைரவி படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். கே பாலச்சந்தர் படங்கள் அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தன. பின் எஸ்.பி முத்துராமன் படங்கள் வழியாக மக்களைக் காக்கும் ஆக்‌ஷன் ஹீரோவாக உருவானார் ரஜினி. மெளன ராகம், நாயகன் , அஞ்சலி ஆகிய படங்களின் மூலம் தனக்கென ஒரு தனி திரைமொழியையும் ரசிகர்களையும் உருவாக்கியிருந்தார் மணி ரத்னம். இப்படியான நிலையில் மணிரத்னம் மற்றும் ரஜினி கூட்டணியில் வெளியான படம் தளபதி.


மாஸ் டயலாக் பேசி ஆக்‌ஷன் ஹீரோவான ரஜினி மணிரத்னம் பட நாயகனாக எப்படி இருப்பார் என்கிற கேள்வியும் எதிர்பார்ப்பும் சினிமா இரு தரப்பு ரசிகர்களிடம்மும் இருந்தது. ஒரு தரப்பு ரசிகர்களையும் பூர்த்தி செய்யும் விதமாக அமைந்தது தளபதி. மற்ற படங்களில் சுருட்டை தூக்கிப் போட்டு வசனம் பேசித ரஜினி இப்படத்தில் குறைவான வசனங்கள் , மிகையில்லாத நடிப்பு என புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தினார். மகாபாரதத்தில் கர்ணனின் கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் மணிரத்னமின் கிளாஸ் அதே நேரம் ரஜினியின் மாஸ் இரண்டும் சேர்ந்து ஒரு பக்கா என்டர்டெயினராக அமைந்தது இளையராஜாவின் பின்னணி இசை, சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு என கதைக்கு பலமடங்கு வேல்யு கூடியது. இன்றுவரை நட்பிற்கு ஒரு சிறந்த உதாரணமாக சூர்யா தேவாவின் காம்போ இருந்து வருகிறது.


எப்படி ரஜினியின் முள்ளும் மலரும் படத்திற்கு ஒரு தனி ரசிகர் கூட்டல் உள்ளதோ அதேபோல் தளபதி படத்திற்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது ரஜினியின் கூலி படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ் தளபதி படத்தை தான் நூறுக்கும் மேற்பட்ட முறை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


ரஜினி பிறந்தநாளுக்கு ரீரிலீஸ் ஆகும் தளபதி


தளபதி படம் வெளியாகி கிட்டதட்ட 33 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ளன. வரும் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் 74 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தளபதி படம் திரையரங்கில் ரீரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கூலி


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா , உபேந்திரா , சத்யராஜ் , செளபின் சஹீர் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பை கையாள்கிறார்கள்.