ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்த கே. பாலச்சந்தருக்கும் அவருக்கும் இடையிலான குரு – சிஷ்யன் உறவு தனித்துவமானது.  கே. பாலச்சந்தர் தனது இறுதிக்காலத்தில் இருந்தபோது ரஜினிகாந்தைச் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவத்தைப் குறித்து நடிகர் மோகன்ராமன் பகிர்ந்துள்ளார் 

Continues below advertisement

மரணப்படுகையில் கே பாலச்சந்தரை பார்க்க வந்த ரஜினி

இந்த சம்பவம் குறித்து நடிகர் மோகன்ராம் கூறியதாவது "ரஜினிகாந்திடம் இருக்கும் மேக்னடிசம், அதாவது ஈர்ப்பு சக்தி அசாதாரணமானது. எனக்கும் அவருக்கும் பொதுவான ஒரு விஷயம் என்றால் அது கே. பாலச்சந்தர் ஐயாதான். கே. பாலச்சந்தர் மருத்துவமனையில் இருந்தபோது, அவரைப் பார்க்க ரஜினிகாந்த் வந்தார். மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், ரஜினியை எப்படி அழைத்துச் செல்வது என்று பாதுகாப்புப் பணியாளர்கள் யோசித்தனர். அப்போது மருத்துவமனையின் பின்புறம் ஒரு வாசல் இருப்பதாகவும், அதன் வழியாக அழைத்துச் செல்லலாம் என்றும் பேசப்பட்டது. கடைசி லிஃப்ட் வரை செல்லும் வழியில் கூட்டம் இருக்கலாம் என்றாலும், பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி ரஜினியை அழைத்துச் சென்றோம்.

கே பாலச்சந்தர் கடைசியாக சொன்ன பெயர்

அறைக்குள் சென்றபோது, கே. பாலச்சந்தரின் மனைவி ராஜம் பாலச்சந்தர், மகள் புஷ்பா கந்தசாமி, நடிகை குஷ்பு ஆகியோர் இருந்தனர். காலையிலிருந்து அவர் கண்களைத் திறக்கவில்லை, பேசவும் இல்லை என்று ராஜம் பாலச்சந்தர் தெரிவித்தார். அப்போது ரஜினி வந்திருப்பதாக அவரிடம் பலமுறை கூறினர். ஆனாலும் எந்த அசைவும் இல்லை.

Continues below advertisement

ரஜினிகாந்த் அருகில் சென்று, அவரது தலையை வருடிக் கொடுத்து, கையைப் பிடித்துக்கொண்டு, “ஐயா, நான் உங்கள் ரஜினி வந்திருக்கிறேன்” என்று கூறினார். மீண்டும் மீண்டும் அதையே சொன்னார். மாலை சுமார் 4.30 அல்லது 5 மணி இருக்கும். காலையிலிருந்து கண்களைத் திறக்காத கே. பாலச்சந்தர், ரஜினியின் குரலைக் கேட்டதும் மெதுவாகக் கண்களைத் திறந்து, புன்னகையுடன் “ரஜினி” என்று அழைத்தார். பின்னர் மீண்டும் கண்களை மூடிக்கொண்டார்.

கே. பாலச்சந்தர் கடைசியாகப் பேசிய வார்த்தை அதுதான். குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே இருந்த பந்தம் அது. ரஜினிகாந்தின் ஈர்ப்புச் சக்தி எத்தகையது என்பது எனக்குத் தெரியும். ஆனால், அந்த சக்தி தனக்குள் எப்படி வந்தது என்பது அவருக்கே தெரியாது. “ஏன் இதெல்லாம் எனக்கு வந்தது, ஏன் இதெல்லாம் நடக்கிறது என்று தெரியவில்லை. எல்லாம் இறைவன் கொடுத்தது” என்று ரஜினி சொல்வார் என்று நடிகர் மோகன்ராமன் தெரிவித்துள்ளார்.