சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரிலீஸ் தேதியுடன் படக்குழு  மாஸான ப்ரோமோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

Continues below advertisement

ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதமே ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது. எடிட் ரூமில் படத்தை பார்த்தபோது இயக்குநர் நெல்சனுக்கு முழு திருப்தியில்லாத காரணத்தினால் ஒரு சில காட்சிகள் புதிதாக படமாக்கப்பட்டது. குறிப்பாக ஹ்ரித்திக் ரோஷன் ஜெயிலர் 2 திரைப்படத்தில் கேமியோ ரோல் நடித்துள்ளார். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ஜெயிலர் 2 ரிலீஸ் 

அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஜெயிலர் 2 உலகளவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது. முந்தைய பாகத்தின் கதையில் வில்லனான விநாயகன் தனக்கு மேலிருக்கும் மற்ற வில்லன்களை பற்றி கூறுகிறார். அதையே தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் கதை நகர்கிறது.படம் வெளியாக இன்னும் 3 மாதம் இருக்கும் நிலையில் இப்போதிருந்தே படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது. 

Continues below advertisement

புதிய கதாபாத்திரங்கள் 

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் முந்தைய பாகத்தில் நடித்த நடிகர்கள் தவிர பல புதிய நடிகரள் காட்டப்பட்டுள்ளார்கள். சிவராஜ்குமார், வித்யா பாலன், சூரஜ் வெஞ்சாரமூடு , யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்னா , பகவதி பெருமாள் , எஸ் ஜே சூர்யா , விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

ஜெயிலர் 2 படம் ரிலீஸூக்கு தயாராகி வரும் நிலையில் ரஜினிகாந்த் தர்மன் படத்தின் படப்பிடிப்பில் விரைவில் இணைய இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மீண்டும் நெல்சன் இயக்கத்தில் கமலுடன் ரஜினி இணைந்து நடிக்க இருக்கிறார் . ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.