Jailer 2 OTT Release Date: ஜெயிலர் 2 திரைப்படம் நவம்பர் 12 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று இன்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது. உலகளவில் ரூ840+ கோடி வரை வசூலித்த இப்படம் 4 ஆவது வாரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக ஜெயிலர் முதல் பாகமும் ஒரே நேரத்தில் திரையரங்கு மற்றும் ஓடிடியில் ஓடியது குறிப்பிடத்தக்கது
1000 கோடிக்கு முட்டுக்கட்டை
ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமை ruu 160 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. திரையரங்கில் வெளியான 4 வாரங்களில் திரைப்படத்தை ஓடிடி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு திரையரங்கில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக வடமாநிலங்களிலும் இப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. ஜெயிலர் 2 ஆயிரம் கோடி வசூலை எட்டுவதற்கான அனைத்து சாத்தியங்கள் இருந்தும் படம் அந்த வாய்ப்பை தவறவிட்டுள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம் 4 வாரத்தில் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்கிற நிபந்தனையே. பதிலாக 8 வாரங்கள் கழித்து படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்திருக்கும் பட்சத்தில் தீபாவளி விடுமுறையில் ஜெயிலர் 2 நிச்சயம் 1000 வசூலை எட்டிய முதல் தமிழ் படமாக சாதனை படைத்திருக்கும்.
ஜெயிலர் 2
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. ரம்யா கிருஷ்ணன் , மிர்ணா மேனன் , ஷிவராஜ்குமார் , வித்யா பாலன் , சூராஜ் வெஞ்சரமூடு , எஸ் ஜே சூர்யா , மிதுன் சக்கரவர்த்தி , ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார்
ஆயுத பூஜையை முன்னிட்டு திரையரங்கில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படமாக அமைந்துள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் வரிசையில் முதலிடத்தில் இருந்த 0 திரைப்படத்தை முந்தியுள்ளது. உலகளவில் ஜெயிலர் 2 திரைப்படம் 840 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
