கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. நாகர்ஜூனா , சத்யராஜ் , உபேந்திரா , செளபின் சாஹீர் , ஸ்ருதி ஹாசன் என படத்தில் ஐந்து மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கூலி படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் படத்தைப் பற்றிய முக்கியமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
கூலி திரைப்படம் சுமார் ரூ 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் 280 கோடியும் படத்தின் இயக்குநர் லோகேஷ் 60 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் வெளி நாட்டு ரிலீஸ் உரிமம் ரூ 75 கோடிக்கும் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை ரூ 120 கோடிக்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு ரிலீஸ் விற்பனை
தற்போது கூலி படத்தின் திரையரங்க ரிலீஸ் விற்பனைக்கான பேரம் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் இப்படத்தை வெளியிடுவதற்கு ஆரம்பத் தொகையாக ரூ 110 கோடி நிர்ணயித்துள்ளது சன் பிக்ச்சர்ஸ். படத்தை கைபற்ற பல விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். அப்படி யாரும் படத்தை வாங்காவிட்டால் சன் பிக்ச்சஸ் தங்கள் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் படத்தை வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கில் கூலி படத்தின் ரிலீஸ் உரிமை 50 கோடிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
கூலி பாடல்
கூலி படத்தின் முதல் பாடலான சிகிட்டு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. டி ராஜேந்திரன் இந்த பாடலை பாடியுள்ள நிலையில் அனிருத் இந்த பாடலில் நடித்துள்ளார்.