கூலி vs வார் 2
வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இரு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக இருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்துள்ள கூலி. மற்றொன்று இந்தியில் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஹரித்திக் ரோஷன் , ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள வார் 2. இரு படங்களிலுமே மிகப்பெரிய ஸ்டார்கள் நடித்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும் வார் 2 படத்தைக் காட்டிலும் கூலி படத்திற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. வார் 2 படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள போதிலும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் கூலி படத்திற்கே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இரு படங்களின் முன்பதிவுகளும் தொடங்கியுள்ள நிலையில் கூலி திரைப்படம் முன்பதிவுகளில் முன்னிலையில் உள்ளது
கூலி முன்பதிவுகள்
இந்தியாவில் கூலி படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் வரும் 8 ஆம் தேதி முதல் துவங்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் பிற நாடுகளில் படத்தின் டிக்கெட் விற்பனை ஒரு மாதம் முன்பே தொடங்கிவிட்டது. வட அமெரிக்காவில் மட்டும் கூலி படத்திற்கு இதுவரை 37 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளன. முன்பதிவுகளில் மட்டும் கூலி இதுவரை ரூ 10 கோடி வரை வசூலித்துள்ளது.
வார் 2 முன்பதிவுகள்
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஹ்ரித்திக் ரோஷன் , ஜூனியர் என்.டி.ஆர் , கியாரா அத்வானி இணைந்து நடித்துள்ள வார் 2 மாபெரும் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. வட அமெரிக்காவில் கூலி படத்தைவிட அதிகளவிலான திரையரங்குகளில் வெளியானாலும் வார் 2 வெறும் 6980 டிக்கெட்கள் மட்டுமே முன்பதிவுகளில் விற்பனையாகியுள்ளது. வார் 2 படத்தைவிட 5 மடங்கு அதிகமாக கூலி படம் டிக்கெட் முன்பதிவுகளில் வசூல் செய்துள்ளது.
கூலி படக்குழு
சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ரஜினிகாந்த் , நாகர்ஜூனா , உபேந்திரா , ஸ்ருதி ஹாசன் , சத்யராஜ் , செளபின் சாஹிர் , சார்லீ , உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்கள்.