தி கோட் வசூலை முறியடித்த கூலி
ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14 தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் மிக பலவீனமான படமாக கூலி படத்தை சிலர் குறிப்பிட்டனர். ரசிகர்களிடம் இப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரியளவில் வரவேற்பு இருந்ததால் வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றுள்ளது.
முதல் நாளில் ரூ 151 கோடி வசூலித்தது கூலி. 4 ஆவது நாளில் ரூ 404 கோடி வசூல் ஆகியதாக படத் தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டது. அந்த வகையில் தற்போது படம் வெளியாகி 7 நாட்கள் கடந்துள்ள நிலையில் கூலி படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி கடந்த ஆண்டு விஜயின் தி கோட் படத்தின் வசூலை கூலி திரைப்படம் முந்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி கோட் படம் மொத்தம் ரூ 464 கோடி வசூலித்திருந்ததாக படக்குழு தகவல் வெளியிட்டது. தற்போது இந்த வசூலை முந்திய கூலி விரைவில் ரூ 500 கோடி வசூலை எட்டும் என கூறப்படுகிறது. கூடிய விரைவில் சன் பிக்ச்சர்ஸ் சார்பாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்