ரஜினிகாந்த் பேச்சால் சர்ச்சை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில்  முன்பதிவுகள் படுதீவிரமாக நடந்து வருகின்றன. கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மலையாள நடிகர் செளபின் சாஹிர் பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. 

செளபின் சாஹிர் பற்றி ரஜினி சொன்னது என்ன ?

கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கூலி படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இறுதியாக ரஜினிகாந்த் பேசியது ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இந்த முழு நிகழ்ச்சி வெளியாகி பரவலாக பார்வையாளர்களை சென்றடைந்தது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மலையாள நடிகர் செளபின் சாஹிர் பற்றி ரஜினிகாந்த் பேசியதே தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது

நடிகர் செளபினைப் பற்றி பேசியபோது ரஜினிகாந்த் " செளபின் உயரம் குறைவாகவும் வழுக்கை தலையுடன் இருந்துகொண்டும் எப்படி இப்படி நடிக்கிறார் என்று அவரது நடிப்பை பாராட்டி பேசினார். செளபினின் தோற்றத்தைப் குறிப்பிட்டு ரஜினி பேசியதை பலர் விமர்சித்து வருகிறார்கள். அதேபோல் அனிருத்தை பார்ப்பதற்காக பெண்கள் அவர் இசை நிகழ்ச்சிக்கு வருவார்கள். அவர்களைப் பார்க்க ஆண்கள் வருவார்கள் என ரஜினி கூறியது . ஆமிர் கானின் உயரத்தைப் பற்றி ரஜினி பேசிய கருத்துக்களும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. ரஜினிக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் இப்படியான கருத்துக்களை மேடையில் பேசியிருந்தால் அதை அனைவரும் கண்டித்திருப்பார்கள். ஆனால் சீனியர் நடிகர் என்கிற மெச்சூரிட்டியே இல்லாமல் ரஜினிகாந்த் இப்படி பேசியும் மக்கள் அதை ரசிக்கவே செய்கிறார்கள் என நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். ரஜினி செளபினின் நடிப்பை பாராட்டு விதமாகவே அப்படி பேசியதாக ரஜினி ரசிகர்கள் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்