நடிகர் ரஜினிகாந்தின் பாட்ஷா படம் வெளியாகி சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சுவாரஸ்யமான சாதனையைப் படைத்துள்ளது.


பாட்ஷா:


1995ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், விஜயகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்து, தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாசிக் படங்களுள் ஒன்றாக உருவெடுத்து படம் பாட்ஷா.


கோலிவுட்டில் கமர்ஷியல் சினிமாக்களின் மைல்கல்லாக இன்று வரை கொண்டாடப்படும் பாட்ஷா படம் கோலிவுட் தாண்டி இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கொண்டு சேர்த்து கல்ட் க்ளாசிக்காக என்றென்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.


பாஸ் ஆஃப் தி டான்:


சூப்பர் ஸ்டார் டைட்டில் தொடங்கி,  தனது நட்சத்திர அந்தஸ்து, அரசியல் அவதாரம் ஆகியவற்றிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி ரஜினிகாந்தின் திரை வாழ்விலும் பாட்ஷா  ஒரு ஸ்பெஷலான படமாக அமைந்தது.


பாட்ஷா படத்தின் தாக்கம் இல்லாத டான் படங்களை கோலிவுட்டில் இன்று வரை காண்பது அரிது. அதேபோல், இன்றுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போது தொடக்கம் முதல் இறுதிவரை பார்த்து ரசிக்கும் பல ரசிகர்களை பாட்ஷா படம் கொண்டுள்ளது. 


புதிய சாதனை:


இந்நிலையில், படம் வெளியாகி சுமார் 28 ஆண்டுகள் கழித்து பாட்ஷா படம் சுவாரஸ்யமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.


அதன்படி, தொலைக்காட்சியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு அதிகபட்ச டெலிவிஷன் ரேட்டிங் பெற்ற படம் எனும் சாதனையைப் படைத்துள்ளது.


11.79 TVR rating - தொலைக்காட்சி மதிப்பீட்டைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், பாட்ஷா படத்தை ட்ரெண்ட் செய்து ரஜினி ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.


 






ரஜினிகாந்த தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் நிலையில், ஜெயிலர் படப்பிடிப்பு காட்சிகள் புகைப்படங்களும் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.


பான் இந்தியா படமாக வெவ்வெறு மொழியில் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி நடிகர்களுடன், பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைக்க மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் எனப் பலர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.


சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலூர், ஜெய்சால்மர், கர்நாடகா என முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.