தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்து நடித்த ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இரு நடிகர்களின் குடும்பங்களுக்கும் இடையே இருக்கும் உறவுத் தொடர்பு குறித்த தகவல் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது
ரஜினிகாந்த் – YG மகேந்திரன் உறவு
ரஜினிகாந்தின் மனைவி லதாவும், நடிகர் YG மகேந்திரனின் மனைவி சுதாவும் சகோதரிகள். இதனால் ரஜினிகாந்தும் YG மகேந்திரனும் சம்பந்தி உறவுமுறையில் வருகின்றனர். நடிகராகவும் நாடகக் கலைஞராகவும் அறியப்படும் YG மகேந்திரன், ரஜினிகாந்தின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர்.
மோகன்லால் குடும்பத்துடனான தொடர்பு
மலையாள நடிகர் மோகன்லாலின் மனைவி சுசித்ரா, பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான கே. பாலாஜியின் மகள். YG மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதியும் கே. பாலாஜியும் உடன்பிறந்தவர்கள். இதனால் கே. பாலாஜி, YG மகேந்திரனின் தாய்மாமா ஆவார். இந்தக் குடும்ப உறவின் வழியாக ரஜினிகாந்தின் குடும்பத்துக்கும் மோகன்லாலின் குடும்பத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினி மோகன்லால் இணைந்து நடித்துள்ளது இரு மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கேரளாவில் ஜெயிலர் 2 திரைப்படம் 6 நாட்களில் ரூ50 கோடி வசூலித்துள்ளது.
ஜெயிலர் 2
ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மோகன்லால், சிவராஜ்குமார் , ஹ்ரித்திக் ரோஷன் . விஜய் சேதுபதி உள்ளிட்டோர் சிறப்புத் தோற்றங்களில் இடம்பெற்றுள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 15, 2026 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம், முதல் ஐந்து நாட்களிலேயே உலகளவில் சுமார் ரூ.477.75 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ரூ.242.25 கோடி நிகர வசூலையும், வெளிநாடுகளில் ரூ.194 கோடி மொத்த வசூலையும் இப்படம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
