ராகுல் அசோக் இயக்கியுள்ள வென்ஜன்ஸ் படத்தில் அபர்நதி, இளவரசு, ஜான்விஜய், லிவிங்ஸ்டன், ஒய். ஜீ. மகேந்திரன், காளி வெங்கட், சரவண சுப்பையா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். ஏபி அசோக் குமார்  படத்தை தயாரித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்

Continues below advertisement

வென்ஜன்ஸ் திரைப்பட விமர்சனம்  

அரசு பள்ளியில் படிக்கும் வேணி (அபர்நதி) தன்னை யாருமே கவனிப்பதில்லை என்பதால் தாழ்வுமனப்பாண்மைக்கு உள்ளாகிறார். இதனால் அவரை நன்றாக படித்து பத்தாவது வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க சொல்கிறார் அவளது தந்தை. மாவட்டத்தில் முதலிடம் வாங்கும் வேணியை அடுத்த 3 நாட்கள் பாராட்டுக்கள் சூழ்கின்றன. ஆனால் நான்காவது நாளில் இந்த பாராட்டுக்கள் குறைந்துபோவதை வேணியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது பக்கம் கவனத்தை திருப்ப அவள் ஒரு செயலை செய்கிறாள். அங்கு தொடங்கி அதே மாவட்டத்திற்கு கலெக்டராக வருகிறார். புகழ் போதைக்காக வேணி அரசியல் ரீதியாக செய்யும் சூழ்ச்சிகள் , அவை மறுபடியும் வேணிபக்கம் திரும்புவதை விறுவிறுப்பான பொலிட்டிக்கல் த்ரில்லராக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராகுல் அசோக்

ஆனால் விறுவிறுப்பு அம்சம் மட்டும் இயக்குநரின் ஐடியாவிலேயே தங்கி திரைக்கதையில் வந்து உட்கார மறுத்துவிட்டது போலும். ஆரம்ப முதல் இறுதி வரை அடுக்கி வைத்தார்போல் காட்சிகள் நகர்கின்றனவே தவிர சுவாரஸ்யம் சுத்தமாக இல்லை. இதற்கு முக்கிய காரணம் கதை சொல்லப்பட்ட விதமும் அவற்றை படமாக்கிய விதமும். ஒரு பள்ளி மாணவி தன்னைவிட எடையில் பல மடங்கு அதிகமுள்ள ஒரு மனிதனை கொலை செய்கிறார் என்றால் அந்த காட்சியில் கொஞ்வாது லாஜிக் இருக்க வேண்டும். ஆனால் அந்த லாஜிக் பற்றி எந்த கவலையும் இல்லாமல் நான் ஆடினே இருப்பேன் என்பது போல் தனக்கேற்ற ட்விஸ்ட்களை படம் முழுவதும் சொருகியபடி இருக்கிறார் இயக்குநர்.  இந்த காட்சிகள் சராசரிக்கும் கிழாக ஒரு திரைப்பட அனுபவமாக நமக்கு கிடைக்கின்றன. படத்தில் ஒரே பலம் என்றால் நாயகி அபர்நதியின் நடிப்புதான். வேணி கதாபாத்திரத்தை தோற்றத்தில் , நடையில் கொண்டு வந்திருக்கிறார். 

Continues below advertisement

இளவரசு, ஜான்விஜய், லிவிங்ஸ்டன், ஒய். ஜீ. மகேந்திரன், காளி வெங்கட் என படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களும் மோனோடோனஸாக இருக்கின்றன. சுமாரான இந்த படத்திற்கு படு ஜோராக இசையமைத்து பில்டப் கொடுத்திருக்கிறார் கார்த்திக் ராஜா. பார்வையாளர்கள் மேல் இயக்குநருக்கு அப்படி என்ன வென்ஜன்ஸ் ?